மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜக பெரும்பான்மை எண்ணிக்கையைக் கடந்து முன்னிலையில் உள்ளது. தெலங்கானாவில் மட்டும் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

11:30 PM (IST) Dec 03
ரிசர்வ் வங்கி இந்த வங்கியை மூடியது. வாடிக்கையாளர்களுக்கு இவ்வளவு பணம் மட்டுமே கிடைக்கும். இதனைப் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
11:16 PM (IST) Dec 03
மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று கனமழை மற்றும் மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
10:05 PM (IST) Dec 03
டெக்னோ ஸ்பார்க் கோ 2024 இந்தியாவில் டிசம்பர் 4 அன்று வெளியிடப்பட உள்ளது. இதனைப் பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
09:44 PM (IST) Dec 03
“அண்ணன் விஜயகாந்த் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடி இதயங்களில் நானும் ஒருவனாகப் பங்கேற்கிறேன்" என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
09:15 PM (IST) Dec 03
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுரை வழங்கி உள்ளது.
08:59 PM (IST) Dec 03
வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர்களின் விலையை அரசாங்கம் 21 ரூபாய் உயர்த்தியுள்ளது. இந்த நிலையில் வீட்டு எல்பிஜி கேஸ் சிலிண்டர் குறைந்துள்ளது.
07:01 PM (IST) Dec 03
பஜாஜ் நிறுவனம் சேடக் அர்பேன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
06:38 PM (IST) Dec 03
மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாஜக 165 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 65 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. மத்திய பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்க உள்ள நிலையில், அடுத்த முதல்வர் யார் என்பதுதான் தற்போது முக்கிய கேள்வியாக உள்ளது.
05:15 PM (IST) Dec 03
தெலங்கானாவில் காங்கிரஸ், ஆளும் பி.ஆர்.எஸ் கட்சியை தோற்கடித்து வெற்றி முகத்துக்கு சென்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு இது ஆறுதல் வெற்றி என்று கூறப்படுகிறது.
05:00 PM (IST) Dec 03
இந்திய மக்கள் நல்லாட்சி மற்றும் வளர்ச்சி அரசியலில் மட்டுமே நம்பிக்கை வைத்துள்ளனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
04:38 PM (IST) Dec 03
தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை மீது டிஜிபி அலுவலகத்தில் அமலாக்கத்துறை புகார் அளித்துள்ளது
03:30 PM (IST) Dec 03
தெலங்கானா மாநிலத் தேர்தலில் பிஆர்எஸ் கட்சியின் தோல்விக்கு அக்கட்சியின் அதீத நம்பிக்கையே காரணமாக பார்க்கப்படுகிறது
01:54 PM (IST) Dec 03
ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கவுள்ள நிலையில், முதல்வராக பொறுப்பேற்கவுள்ளது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது
12:56 PM (IST) Dec 03
Chhattisgarh Election 2023 : மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக தனது வெற்றியின் பாதி வழியைக் கடந்துள்ளது. அதே நேரத்தில் தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
12:56 PM (IST) Dec 03
தெலங்கான மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ள நிலையில், பிற்பகல் 1 மணிக்கு கட்சி தலைமை அலுவலகமான காந்தி பவனுக்கு மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி செல்கிறார்.
12:27 PM (IST) Dec 03
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜக பெரும்பான்மை எண்ணிக்கையைக் கடந்து முன்னிலையில் உள்ளது. தெலங்கானாவில் மட்டும் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
12:15 PM (IST) Dec 03
தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் வருகிற 6ஆம் தேதி நடைபெறவுள்ளது
11:45 AM (IST) Dec 03
சர்தார்புரா தொகுதியில் முதலமைச்சர் அசோக் கெலாட், டோங்க் தொகுதியில் சச்சின் பைலட் முன்னிலை பெற்றுள்ளனர்.
11:43 AM (IST) Dec 03
ராஜஸ்தானில் பாஜக 115 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைய இணையதளம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் 67 இடங்களிலும், மற்ற கட்சிகள் 9 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 3 இடங்களிலும், பாரத் ஆதிவாசி கட்சி 2 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.
11:20 AM (IST) Dec 03
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை, ஆற்றல் வாய்ந்த ரேவந்த் ரெட்டியின் வியூகம் தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு வித்திட்டுள்ளது
11:15 AM (IST) Dec 03
சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் பதான் தொகுதியில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்துள்ளார்.
பாஜக வேட்பாளர் விஜய் பாகேல் 5375 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
10:54 AM (IST) Dec 03
சத்தீஸ்கரின் 78 இடங்களின் நிலவரங்கள் வெளியான நிலையில் காங்கிரஸ் 43 இடங்களிலும், பாஜக 45 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. அதேசமயம் மற்ற ஒரு இடத்தில் முன்னிலை பெற்றுள்ளனர்.
10:46 AM (IST) Dec 03
ராஜஸ்தான் மாநில தேர்தலில் பாஜக தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான 105 இடங்களை தாண்டி பாஜக முன்னிலையில் இருந்து வருகிறது. அதேபோல், ஆளும் காங்கிரஸ் கட்சி 71 இடங்களிலும் பெற்றுள்ளது.
10:43 AM (IST) Dec 03
மத்திய பிரதேச மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடிக்கிறது. 136 இடங்களுக்கு மேல் முன்னிலை வகிக்கும் நிலையில் மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்கிறது பாஜக. காங்கிரஸ் 89 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.
10:32 AM (IST) Dec 03
சத்தீஸ்கரின் பதான் சட்டப்பேரவை தொகுதியில் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் முன்னிலையில் உள்ளார்.
10:24 AM (IST) Dec 03
தெலங்கானாவில் அதிக இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. பெருபான்மைக்கு தேவையான 66 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. ஆளுங்கட்சியான பிஆர்எஸ் 35 இடங்களிலும், பாஜக 7 தொகுகளில், ஏஐஎம்ஐஎம் 6 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
10:07 AM (IST) Dec 03
ராஜஸ்தானில் டோங்க் தொகுதியில் சச்சின் பைலட் 1,173 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
10:05 AM (IST) Dec 03
தேர்தல் ஆணைய இணையதள தகவலின் மத்திய பிரதேசத்தில் பாஜக 148 இடங்களிலும், காங்கிரஸ் 80 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
09:57 AM (IST) Dec 03
மத்தியப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 130 இடங்களிலும், காங்கிரஸ் 96 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. களநிலவரத்தை பார்க்கும் போது மீண்டும் பாஜக ஆட்சியமைக்க அதிக வாய்ப்புள்ளது.
09:46 AM (IST) Dec 03
மத்தியப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி உறுதியாக ஆட்சியமைக்கும் என அம்மாநில தலைவர் கமல்நாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்
09:46 AM (IST) Dec 03
தெலங்கானாவில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளில் முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் பெருபான்மைக்கு தேவையான 60க்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. ஆளுங்கட்சியான பிஆர்எஸ் 35 இடங்களிலும், ஏஐஎம்ஐஎம் 6 இடங்களிலும், பாஜக 5 தொகுகளில் மட்டும் முன்னிலை பெற்று 4வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
09:31 AM (IST) Dec 03
தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் இரண்டு தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்து வருகிறார்
09:29 AM (IST) Dec 03
தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் இரண்டு தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்து வருகிறார்
09:28 AM (IST) Dec 03
தெலங்கானாவில் கரீம்நகர் தொகுதியில் பாஜக மாநில தலைவர் பண்டி சஞ்சய்குமார் முன்னிலை பெற்றுள்ளார்.
09:24 AM (IST) Dec 03
தெலங்கானாவில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளில் காங்கிரஸ் 66 இடங்களிலும், பிஆர்எஸ் 40 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும், ஏஐஎம்ஐஎம் 7 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
09:22 AM (IST) Dec 03
4 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் சத்தீஸ்கர், தெலங்கானா மாநிலங்களில் முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.
09:16 AM (IST) Dec 03
சிந்த்வாரா சட்டப்பேரவை தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் முன்னிலை பெற்றுள்ளார். பாஜகவை சேர்ந்த விவேக் புந்தி சாகு பின்னடைவை சந்தித்துள்ளார்.
09:15 AM (IST) Dec 03
மத்தியப் பிரதேசம் முன்னிலை நிலவரம்: 219/230
பாஜக - 124
காங்கிரஸ் - 94
பகுஜன் - 00
மற்றவை - 01
தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் முன்னிலை: 109/119
காங்கிரஸ் - 62
பிஆர்எஸ் - 36
பாஜக - 05
மற்ற-06
ராஜஸ்தான் முன்னிலை நிலவரம்: 195/199
பாஜக-104
காங்-86
பகுஜன்-00
மற்ற-05
சத்தீஸ்கர் முன்னிலை நிலவரம்: 86/90
காங்-44
பாஜக-41
ஜெசிசி-00
மற்ற-01
09:02 AM (IST) Dec 03
மத்தியப் பிரதேசம் முன்னிலை நிலவரம்: 141/230
பாஜக - 83
காங்கிரஸ் - 58
பகுஜன் - 0
மற்றவை - 0
தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் முன்னிலை: 71/119
காங்கிரஸ் - 40
பிஆர்எஸ் - 26
பாஜக - 05
மற்ற-00
ராஜஸ்தான் முன்னிலை நிலவரம்: 170/199
பாஜக-99
காங்-72
பகுஜன்-00
மற்ற-02
சத்தீஸ்கர் முன்னிலை நிலவரம்: 78/90
காங்-44
பாஜக-34
ஜெசிசி-00
மற்ற-00