
உச்ச நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக தனஞ்செயா ஒய் சந்திரசூட் இன்று பதவி ஏற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த யு.யு.லலித் 74 நாட்கள் மட்டுமே அந்தப் பதவியில் இருந்தார். அவருக்கு அடுத்தார்போல் தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி டிஒய் சந்திரசூட்டை கடந்த மாதம் 11ம் தேதி பரிந்துரை செய்தார். இதையடுத்து, அடுத்த தலைமை நீதிபதியாக டிஒய் சந்திரசூட் நியமிக்கப்பட்டு, அதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்தார்.
தலைமை நீதிபதியாக இருந்த யுயு லலித் நேற்று ஓய்வு பெற்றார். அதைத் தொடர்ந்து 50வது தலைமை நீதிபதியாக டிஒய் சந்திரசூட் இன்று பதவி ஏற்றார்.
தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்றுள்ள டிஒய் சந்திரசூட் அடுத்த 2 ஆண்டுகளுக்கு அதாவது 2024, நவம்பர் 11ம் தேதிவரை அந்தப் பொறுப்பில் இருப்பார்.
டிஒய் சந்திரச்சூட்டின் தந்தை ஒய்வி சந்திரசூட்டும் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர். உச்ச நீதிமன்றத்தில் நீண்டகாலம் அதாவது 1978, பிப்ரவரி 22 முதல் 1985, ஜூலை 11மதேதிவரை தலைமை நீதிபதியாக இருந்தவர் என்ற பெருமை ஒய்வி சந்திரசூட்டுக்க உண்டு.
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாகிறார் டிஒய் சந்திரசூட்:யுயு லலித் பரிந்துரை
தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள டிஒய் சந்திரசூட், 1959ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி பிறந்தார். டெல்லியில் உள்ள ஸ்டீபன் கல்லூரியில் படித்து, டெல்லி பல்கலையில் முதுகலை பட்டத்தையும், சட்டப்படிப்பயைும் சந்திரசூட் முடித்தார். 2016, மே 13ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக சந்திரசூட் நியமிக்கப்பட்டார்.
நீதிபதியாக சந்திரசூட் இருந்தபோது ஏராளமான முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கியுள்ளார். அதில் 24 வாரங்களான கருவையும் திருமணமாகாத பெண் கலைக்க உரிமை உண்டு என்று பரபரப்பு தீர்ப்பை வழங்கினார்.
கொரோனா காலத்தில் ஏழை மக்கள் உணவின்றி, போக்குவரத்து வசதியின்றி சாலையில் நடந்தே வருவதை அறிந்த நீதிபதி சந்திரசூட், மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் பல்வேறு வழிகாட்டுதல்களையும், உத்தரவுகளையும் பிறப்பித்தார். கொரோனா காலத்தில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சப்ளையில் சிக்கல் ஏற்பட்டபோது, அதை முறைப்படுத்தி சீராக கிடைக்க உத்தரவுகளையும் சந்திரசூட் பிற்பபித்திருந்தார்
உச்ச நீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதி யார்? யுயு லலித்தின் பரிந்துரை கேட்கிறது மத்திய அரசு
2020ம் ஆண்டு பிப்பரவரி மாதம் சந்திரசூட் வரலாற்று தீர்ப்பை அளித்தார். அதாவது, ராணுவத்தில் பெண்களுக்கான பணியை நிரந்தரமாக்குவத், காமாண்டர் பதவிகளை ஒதுக்குதல், ஆண்களுக்கு நிகராக நடத்துதல் போன்ற உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
அயோத்தி-பாபர் மசூதி வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வில் நீதிபதி சந்திரசூட்டும் இடம் பெற்றிருந்தார். அதில் மசூதி கட்டுவதற்கு தனியாக சன்னி வக்பு வாரியத்துக்கு 5 ஏக்கர் இடம் ஒதுக்க மத்திய அரசுக்கு சந்திரசூட் உத்தரவு பிறப்பித்தார்.