ஜி-20 கூட்டமைப்பு மாநாட்டில் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு இமாச்சலப்பிரதேசத்தின் கலை, கலாச்சாரத்தை உணர்த்தும் பரிசுகளை பிரதமர் மோடி வழங்கஉள்ளார்.
ஜி-20 கூட்டமைப்பு மாநாட்டில் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு இமாச்சலப்பிரதேசத்தின் கலை, கலாச்சாரத்தை உணர்த்தும் பரிசுகளை பிரதமர் மோடி வழங்கஉள்ளார்.
ஜி-20 கூட்டமைப்பில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரேசில், கனடா, சீனா,ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளும், ஐரோப்பிய யூனியனும் அடங்கியுள்ளன.
இந்த ஜி-20 கூட்டமைப்புக்கு அடுத்த ஓர் ஆண்டுக்கு இந்தியா தலைமைப் பொறுப்பேற்க உள்ளது. வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் அந்தப் பொறுப்பை இந்தியா ஏற்கும் நிலையில், அதற்கான லட்சினை, கருத்துரு, இணையதளம் ஆகியவற்றை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார்.
ஓர் ஆண்டு தலைமைப் பொறுப்பில் இருக்கும் இந்தியா, உலகளாவிய பிரச்சினைகளான பருவநிலை மாறுபாடு, தீவிரவாதப் பிரச்சினை, கடன்பிரச்சினை, கொரோனா தாக்கம், உள்ளிட்டவற்றுக்கு தீர்வு காண முயலும்.
டெல்லி சென்ற தமிழிசை சௌந்தரராஜன்… மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச்சு!!
இந்நிலையில் ஜி-20 கூட்டமைப்புக்கு தற்போது இந்தோனேசியா தலைவராக இருக்கிறது. வரும் 15 மற்றும் 16ம் தேதியில் இந்தோனேசியாவின் பாலி தீவில் ஜி-20 கூட்டமைப்பு நாடுகள் மாநாடு நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
ஏழை விவசாயிகளுக்கு 5 கோடி மதிப்பில் நிலங்களை வழங்கிய சீக்கிய சகோதரர்கள் - குவியும் பாராட்டு !!
பாலி நகருக்குச் செல்லும் பிரதமர் மோடி, உலகத் தலைவர்களைச் சந்திக்கும்போது இந்தியக் கலாச்சாரம், பண்பாட்டை விளக்கும் பொருட்களை பரிசாக வழங்க உள்ளார். அதிலும் குறிப்பாக இமாச்சலப்பிரதேசத்தின் கலை, பாரம்பரியம், வரலாற்றை விளக்கும் பொருட்களை பரிசாக வழங்க உள்ளார்.
10% இட ஒதுக்கீடு.! உயர்ஜாதி ஏழைகளுக்கு இடஒதுக்கீடு தேவையா ? சர்ச்சைகளுக்கு காரணம் என்ன ?
குறிப்பாக, சம்பா ருமல்ஸ், கங்கரா ஓவியங்கள், கின்னுவரி ஷால், இமாச்சலி முகாதே, குலு ஷால், கனல் பிராஸ் செட் உள்ளிட்டவற்றை உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி பரிசாக வழங்க உள்ளார்.
இமாச்சலப்பிரதேசத்தின் கலை, பாரம்பரிய பொருட்கள் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், பிரேசில், ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு பயணிக்க உள்ளது.