இனி மூத்த குடிமக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்... கர்நாடக அரசு அதிரடி உத்தரவு..

By Ramya s  |  First Published Dec 18, 2023, 1:58 PM IST

கேரளாவில் கோவிட் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மூத்த குடிமக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. 


கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கர்நாடக அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கர்நாடாகவில் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் மாஸ்க் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கர்நாடக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் இன்று செய்தியாளர்களை சந்தித்த்தார். அப்போது மூத்த குடிமக்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் மாஸ்க் அணியும்படி அறிவுறுத்தினார். 

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மேலும்  “ கொரோனா குறித்து மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம். நேற்று நாங்கள் ஒரு கூட்டத்தை நடத்தினோம், அதில் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசித்தோம். விரைவில் ஒரு ஆலோசனையை வெளியிடுவோம். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இதயப் பிரச்சனைகள் உள்ளவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் உள்ளவர்கள் கட்டாயம் முகமூடி அணிய வேண்டும்.” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் “அரசு மருத்துவமனைகளை தயாராக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். கேரளாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் பகுதிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மங்களூர், சாமநாஜ்நகர் மற்றும் குடகு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கொரோனா பரிசோதிஅனை அதிகரிக்கப்படும். சுவாசக் கோளாறு உள்ளவர்கள் கட்டாயமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும், ”என்று கூறினார்.

இதனிடையே இன்று இந்தியாவின் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 1 828 ஆக உயர்ந்தது, அதே நேரத்தில் கேரளாவில் ஒரு மரணம் பதிவாகியுள்ளது, கோவிட் துணை மாறுபாடு JN.1 கண்டறியப்பட்டது என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

கேரளாவில் JN.1 கோவிட் மாறுபாடு.. அறிகுறிகள் என்ன? நோயில் இருந்து எப்படி தற்காத்து கொள்வது?

இதனிடையே கேரளாவில் கண்டறியப்பட்ட கோவிட்-19 துணை மாறுபாடு JN.1 கவலைக்குரியது இல்லை என்று அம்மாநில சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்தார். புதிய மாறுபாடு குறித்து ஊடகங்களிடம் பேசிய அவர், சிங்கப்பூர் விமான நிலையத்தில் திரையிடப்பட்ட இந்திய பயணிகளிடம் பல மாதங்களுக்கு முன்பு துணை மாறுபாடு கண்டறியப்பட்டது.

எந்த கவலையும் தேவையில்லை. இது ஒரு துணை வகை. இது இங்கே கண்டுபிடிக்கப்பட்டது. மாதங்களுக்கு முன்பு, சிங்கப்பூர் விமான நிலையத்தில் திரையிடப்பட்ட ஒரு சில இந்தியர்களிடம் இந்த மாறுபாடு கண்டறியப்பட்டது. இதன் மூலம் கேரளா இந்த மாறுபாட்டை அடையாளம் கண்டுள்ளது. மரபணு வரிசைமுறை. கவலைப்படத் தேவையில்லை. நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது," என்று அவர் கூறினார். எவ்வாறாயினும், மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அவ்ர் கேட்டுக்கொண்டார், மேலும் இணை நோய் உள்ளவர்கள் , நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். 

click me!