ஐஐடி நண்பரை கரம்பிடித்த அரவிந்த் கெஜ்ரிவால் மகள்! யார் இந்த சம்பவ் ஜெயின்?

Published : Apr 19, 2025, 08:41 AM IST
ஐஐடி நண்பரை கரம்பிடித்த அரவிந்த் கெஜ்ரிவால் மகள்! யார் இந்த சம்பவ் ஜெயின்?

சுருக்கம்

டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா கெஜ்ரிவாலுக்கும், அவருடன் ஐஐடி படித்த சம்பவ் ஜெயினுக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

Arvind Kejriwal's daughter marries IIT friend Sambhav Jain: டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா கெஜ்ரிவாலுக்கும், ஐஐடியில் ஒன்றாக படித்த சம்பவ் ஜெயினுக்கும் நேற்று திருமணம் நடந்தது. டெல்லியில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற திருமணத்தில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். 

ஹர்ஷிதா கெஜ்ரிவால் சம்பவ் ஜெயின் திருமணம் 

பாலிவுட் பாடகி மிகா சிங் மற்றும் ஆம் ஆத்மி அமைச்சர் கோபால் ராய் உள்ளிட்ட பிற முக்கிய பிரமுகர்களும் ஹர்ஷிதா கெஜ்ரிவால், சம்பவ் ஜெயின் திருமணத்தில் கலந்து கொண்டனர். மகளின் திருமணத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவாலுடன் இணைந்து உற்சாகமாக நடனமாடிய வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் மணமக்கள்  ஹர்ஷிதா கெஜ்ரிவால், சம்பவ் ஜெயினுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ஹர்ஷிதா கெஜ்ரிவால் என்ன செய்கிறார்?

ஹர்ஷிதா கெஜ்ரிவால் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சுனிதா கெஜ்ரிவாலின் ஒரே மகள் ஆவார். அவருக்கு புல்கிட் கெஜ்ரிவால் என்ற ஒரு தம்பி உள்ளார். அவர் தற்போது ஐஐடி டெல்லியில் படித்து வருகிறார். ஹர்ஷிதா தானே ஐஐடி டெல்லியின் முன்னாள் மாணவி. அங்கு அவர் வேதியியல் பொறியியலில் பட்டம் பெற்றார். ஐஐடி டெல்லியில் படித்தபோது தான் அவர் சாம்பவ் ஜெயினை சந்தித்தார்.

வெறுங்காலுடன் சென்ற மக்கள்! ஒரு கிராமத்துக்கே காலணிகளை அனுப்பிய பவன் கல்யாண்!

யார் இந்த சம்பவ் ஜெயின்? 

அப்போது தான் இருவருக்கும் காதல் மலர்ந்து இப்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர். சம்பவ் ஜெயின் ஒரு தனியார் நிறுவனத்தில் திட்ட மேலாண்மை ஆலோசகராக உள்ளார். ஹர்ஷிதா கெஜ்ரிவால் மற்றும் சாம்பவ் ஆகியோர் பசில் ஹெல்த் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தையும் இணைந்து நிறுவியுள்ளனர். 2018 இல் பட்டம் பெற்ற பிறகு, ஹர்ஷிதா குருகிராமில் உள்ள பாஸ்டன் கன்சல்டிங் குழுமத்தில் (BCG) இணை ஆலோசகராக தனது தொழில்முறை பயணத்தைத் தொடங்கினார். 

ஸ்டார்ட் அப் நிறுவனம் 

ஆலோசனை நாட்களில் ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறையுடன் போராடிய தனது சொந்த அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்ட அவர், அண்மையில் சம்பவ் ஜெயின் உடன் இணைந்து 'பேசில் ஹெல்த்' என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தை நிறுவினார். இந்த ஸ்டார்ட் அப் சத்தான உணவுகளை வழங்குகிறது, இது ஆரோக்கியமான உணவை மேலும் அணுகக்கூடியதாகவும் நிலையானதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அரசியல் போர்களத்தில் மலர்ந்த காதல்: 60 வயதில் காதல் திருமணம் செய்த பாஜக தலைவர்! யார் இவர்? என்ன செய்தார்?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வாக்கு வங்கிக்காக நீதிபதிக்கு எதிராக தீர்மானமா.. எதிர்க்கட்சிகள் மீது அமித் ஷா கடும் தாக்கு!
யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் தீபாவளி பண்டிகை! பிரதமர் மோடி மகிழ்ச்சி!