
மேரட்டைச் சேர்ந்த ரவிதாவின் கதை, சில மாதங்களுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்திய முஸ்கான் வழக்கு கதை போலவே உள்ளது. இங்கும் மனைவி தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்துள்ளார்.
ரவிதா தனது கணவர் அமித் மற்றும் குழந்தைகளுடன் சஹாரன்பூரில் உள்ள மாதா சாக்கம்பரி தேவியின் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு அங்கிருந்து திரும்பி வரும் வழியில், கணவனுக்கு தெரியாமல், தன்னுடைய காதலன் அமர்ஜித்துக்கு போன் செய்து, "இன்றிரவு கணவனை கொலை செய்துவிடுவோம் என கூறி... " தங்களின் திட்டப்படி விஷ பாம்பு ஒன்றை இருவரும் வாங்கி உள்ளனர்.
அமர்ஜித் மற்றும் ரவிதா இருவரும் அமித்தின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, பின்னர் உயிருள்ள பாம்பை அவரின் சடலத்தின் அருகில் விட்டுவிட்டனர். இதனால் பாம்பு கடித்ததால் அவர் இறந்து விட்டார் என ஊரை நம்ப வைக்க முயன்றனர்.
இந்த வழக்கை விசாரணை செய்த போலீசாருக்கு, அமித் மரணத்தின் மீது சந்தேகம் ஏற்படவே... அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், அமித் பாம்பு கடித்ததால் இறக்கவில்லை, கழுத்தை நெரித்ததால் இறந்தார் என்பது தெரியவந்தது. போலீசார் விசாரணை நடத்தியபோது.
பின்னர் ரவிதா முன்னுக்கு பின் முரணாக பதில் கூறிய நிலையில்... ஒரு கட்டத்தில் கணவரை கொலை செய்த உண்மையை ஒப்புக்கொண்டார்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ரவிதா அமித் அடிக்கடி தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், பாலியல் தொழிலில் ஈடுபட கட்டாயப்படுத்துவதாகவும்.. அமர்ஜித்தை அழைத்து உன்னையும் கொன்றுவிடுவேன்" என்று அவர் கூறினார். அதனால் அவரை கொலை செய்ய திட்டம் போட்டோம்.
கொலை நடந்த இரவு அமர்ஜித் அமித்தின் கழுத்தை நெரித்ததாகவும், தானே கணவரின் கை மற்றும் வாயைப் பிடித்ததாகவும், அதனால் அவர் சத்தம் போட முடியவில்லை என்றும் ரவிதா கூறினார். பின்னர் அவர்கள் பாம்பை சடலத்தின் அருகில் விட்டுவிட்டனர். பாம்பை முதலில் யார் பார்த்தது? வீடியோவை யார் எடுத்தது? பாம்பாட்டியை யார் அழைத்தது? அவருடைய எண் எங்கிருந்து கிடைத்தது? இந்தக் கேள்விகளில் தான் ரவிதா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
போலீசார் ரவிதா மற்றும் அமர்ஜித்தை கைது செய்துள்ளனர். பாம்பாட்டி எங்கிருந்து பாம்பைக் கொண்டு வந்தார், இந்த சதியில் அவர் சம்பந்தப்பட்டாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.