
Mumbai Metro Line 7A என்பது தஹிசர் கிழக்கிலிருந்து குண்டவ்லி வரை செல்லும் தற்போதைய லைன் 7-ன் 3.4 கிலோ மீட்டர் நீட்டிப்பாகும். இந்த நீட்டிப்பு நகரின் மெட்ரோ நெட்வொர்க்கை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்துடன் (CSMI) இணைக்கிறது.
மும்பை பமன்வாடியில் உள்ள மெட்ரோ லைன் 7A சுரங்கப்பாதை கட்டுமானத்துடன் அதன் மெட்ரோ உள்கட்டமைப்பில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த நிகழ்வைக் குறிக்கும் விழாவில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கலந்து கொண்டார். மெட்ரோ லைன் 7A என்பது தஹிசர் கிழக்கிலிருந்து குண்டவ்லி வரை செல்லும் தற்போதைய லைன் 7 இன் 3.4 கிலோமீட்டர் நீட்டிப்பாகும். இது நகரின் மெட்ரோ நெட்வொர்க்கை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்துடன் இணைக்கும், இது மும்பையின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளிலிருந்து பயணிகளுக்கான பயண வசதியை எளிதாக்குகிறது.
இந்தியாவுக்கு 2 புல்லட் ரயில்களை இலவசமாக வழங்கும் Japan; ஏன்? எதற்காக?
Mumbai Metro 60 நிமிட பயண நேரம் குறையும்:
இந்தப் பாதையில் இரண்டு ரயில் நிலையங்கள் இருக்கும். ஏர்போர்ட் காலனியில் உயர்த்தப்பட்ட ஒரு ரயில் நிறுத்தம் மற்றும் CSMI விமான நிலையத்தில் ஒரு சுரங்க நிறுத்தமாகும். இந்த ரயில் பாதை செயல்பாட்டுக்கு வந்ததும், வடக்கில் மீரா-பயந்தர் மற்றும் தெற்கில் கொலாபாவிலிருந்து பயணிகளுக்கு பயண நேரம் 60 நிமிடங்கள் வரை குறையும்.
மும்பை பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையம் (MMRDA) தலைமையிலான மெட்ரோ பாதை 7A, விமான நிலையத்தை எளிதில் அடையும் வகையில் தடையற்ற, திறமையான இணைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது, கட்டுமானப் பணிகளில் 52% க்கும் அதிகமானவை நிறைவடைந்துள்ளன. இந்த பாதை டிசம்பர் 2026 க்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பையில் புதிய மெட்ரோ ரயில்கள்.. எப்படி இருக்கு? ட்விட்டரில் பாராட்டும் பொதுமக்கள் !!
நிகழ்வில் பேசிய முதலமைச்சர் ஃபட்னாவிஸ், ''மெட்ரோ பாதை 7A-ல் ஒரு பொறியியல் அற்புதம் ஏற்பட்டுள்ளது. இந்த மெட்ரோ ரயில் மேம்பாலமாகவும், சுரங்கத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. இது மும்பையின் தெற்கு மற்றும் வடக்குப் பகுதியை இணைக்கும். அடுத்த ஆண்டுக்குள் மும்பையில் 100 கிலோமீட்டர் மெட்ரோ பாதையை அமைக்க இலக்கு வைத்துள்ளோம். மெட்ரோ மும்பைக்கு புதிய உயிர்நாடியாக இருக்கும்'' என்றார்.
MMRDA தற்போது மும்பை பெருநகரப் பகுதி முழுவதும் 337 கி.மீ மெட்ரோ ரயில் பாதையை செயல்படுத்தி வருகிறது. மெட்ரோ பாதைகள் 1, 2A, மற்றும் 7 ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளன, அதே நேரத்தில் பாதைகள் 2B, 4, 5, 6, 7A, 9, மற்றும் 12 ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.