சர்க்கரை அளவை அதிகரிக்க அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுமென்றே ஸ்வீட் சாப்பிடுகிறார்.. ED குற்றச்சாட்டு..

By Ramya sFirst Published Apr 18, 2024, 3:44 PM IST
Highlights

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜாமீன் பெறுவதற்காக வேண்டுமென்றே இனிப்பு வகைகளை சாப்பிட்டு சர்க்கரை அளவை அதிகரிக்கிறார் என்று அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், வேண்டுமென்றே இனிப்பு வகைகளை சாப்பிட்டு சர்க்கரை அளவை அதிகரிக்கிறார் என்று அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. 

அரவிந்த் கெஜ்ரிவால் தனது சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணிக்கவும், மருத்துவரிடம் ஆலோசனை பெறவும் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டெல்லி நீதிமன்றம் இன்று விசாரித்து வந்தது. கெஜ்ரிவாலின் இரத்த சர்க்கரை அளவு ஏற்ற இறக்கமாக இருப்பதாகவும், அவர் தனது வழக்கமான மருத்துவரை அணுக வேண்டும் என்றும் விண்ணப்பத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வாரத்திற்கு மூன்று முறை வீடியோ கான்பரன்ஸ் மூலம் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும் என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Fact Check செக்ஸ் தான் தனது எனர்ஜி என்று சொன்னாரா மஹுவா மொய்த்ரா?

அமலாக்க துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் ஜோஹெப் ஹொசைன், ” அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுமென்றே மாம்பழம், இனிப்புகளை சாப்பிடுவதுடன், தேநீரில் சர்க்கரை சேர்த்து குடித்து வருகிறார். இதன் மூலம் தனது சர்க்கரை அளவை உயர்த்தி, அதை காரணம் காட்டி ஜாமீன் கோருவதற்கான முயற்சித்து வருகிறார் என்று வாதிட்டார். 

கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விவேக் ஜெயின், அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கேலரியில் விளையாடுவதாகவும், ஊடக விளம்பரத்திற்காக தகவல்களை தெரிவிப்பதாகவும் கூறினார். மேலும் மருத்துவர்களின் பரிந்துரை படியே கெஜ்ரிவால் உணவருந்துவதாகவும் கூறினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் கெஜ்ரிவாலின் உணவு முறை குறித்த மருத்துவ அறிக்கையை சிறை அதிகாரிகளிடம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் நீதிமன்ற காவலில் உள்ளார். விசாரணை நீதிமன்றம் அவரது நீதிமன்ற காவலை ஏப்ரல் 23, 2024 வரை நீட்டித்துள்ளது.

முன்னதாக இந்த வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்தும், தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டதை எதிர்த்தும் அவர் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த த்தரவை எதிர்த்து கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Bitcoin : 6600 கோடி ஊழல்.. ராஜ் குந்த்ரா, ஷில்பா ஷெட்டியின் 97 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் - ED அதிரடி!

இதனிடையே, சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் கேபினட் அமைச்சர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் சந்திப்புகளை நடத்த கெஜ்ரிவாலை அனுமதித்து, தில்லியை திறம்பட நிர்வாகம் செய்வதற்கான ஏற்பாடுகளை சிறைத்துறை இயக்குநருக்கு உத்தரவிடக் கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது தொடர்பான தவறான, பரபரப்பான தலைப்புகளை ஊடகங்கள் ஒளிபரப்புவதைத் தடுக்குமாறு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்துக்கு உத்தரவிடவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

click me!