Shilpa Shetty : பண மோசடி விவகாரத்தில் சிக்கியுள்ள பிரபல நடிகை ஷில்பா செட்டி மற்றும் அவருடைய கணவரின் 98 கோடி ரூபாய் மதிப்புள்ளான சொத்துக்கள் அமலாக்க துறையினர் முடக்கியுள்ளனர்.
பாலிவுட் உலகில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வரும் பிரபல நடிகை சில்பா செட்டி, மிஸ்டர் ரோமியோ மற்றும் குஷி ஆகிய இரு தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கும் பிரபல தொழிலதிபர் ராஜ் குந்திரா என்பவருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அதற்கு முன்பு கடந்த 2003 முதல் 2006 ஆம் ஆண்டு வரை கவிதா என்பவருடன் ராஜ்கந்திரா வாழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ஆபாச திரைப்படங்களை தயாரித்து அதை வெளிநாட்டில் உள்ள பணக்காரர்களுக்கு விற்ற வழக்கில் ராஜ் குந்திரா சிறை சென்றார். அவரை போராடி ஷில்பா ஷெட்டி அண்மையில் ஜாமீனில் வெளியே கொண்டு வந்தார். இந்நிலையில் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குதிராவிற்கு சொந்தமான சுமார் 97.79 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்க துறையினர் தற்பொழுது முடக்கி இருப்பது பாலிவுட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரிணாமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. மஹுவா மொய்த்ராவின் சர்ச்சை பேச்சு.. வைரல் வீடியோ..
தற்பொழுது இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமாக உள்ள பிட்காயின் மோசடியில் அவர் ஈடுபட்டதாக கூறி இந்த நடவடிக்கையை அமலாக்கத் துறையினர் மேற்கொண்டுள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு பதிவான ஒரு வழக்கின்படி பிரபல நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த அமித் பரத்வாஜ், அஜய் பரத்வாஜ், விவேக் பரத்வாஜ், மற்றும் மகேந்திரா பரத்வாஜ் உள்ளிட்டோர் பிட்காயின்கள் மூலமாக சுமார் 600 கோடி மக்களிடம் இருந்து சுரட்டி இருப்பதாக கூறப்படுகிறது.
இதில் சுமார் 150 கோடி பணத்தை குந்திரா மோசடி செய்திருப்பதாகவும் தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை அடித்து தான் நடிகை சில்பா செட்டி பங்களா ஒன்றை அமலாக்கத்துறை தற்பொழுது கையகப்படுத்தி உள்ளது, இது தொடர்பான விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. இது குறித்து என்ன பதில் ஷில்பா கூறப்போகிறார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Yuvan : இன்ஸ்டாகிராமை டெலீட் செய்த யுவன் சங்கர் ராஜா.. விஜயின் ரசிகர்கள் தான் காரணமா? என்ன நடந்தது?