திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மஹுவா மொய்த்ரா தனது எனர்ஜியின் ரகசியம் தொடர்பாக அளித்த பதில் வைரலாகி வரும் நிலையில், அதன் உண்மைத்தன்மை என்ன என்று தெரிந்து கொள்ளலாம்
நாடாளுமன்றத்தில் தனது அனல் பறக்கும் பேச்சின் மூலம் பிரபலமானவர் திரிணாமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. மஹுவா மொய்த்ரா. பாஜகவினரை அலறவிடும் இவரது பேச்சுக்கள் இணையத்தில் அவ்வப்போது வைரலாகும். இதனிடையே, நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்றதாக எழுந்த புகாரில், நெறிமுறைக் குழு அறிக்கையின் பரிந்துரை நாடாளுமன்ற மக்களவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டதையடுத்து, மஹுவா மொய்த்ரா தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதை தொடர்ந்து பாஜக தலைமையிலான மத்திய அரசை அவர் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதனிடையே, எதிர்வரவுள்ள 2024 மக்களவைத் தேர்தலில் மேற்குவங்க மாநிலம் கிருஷ்ணாநகர் தொகுதியில் போட்டியிட மஹுவா மொய்த்ராவுக்கு திரிணாமூல் காங்கிரஸ் தலைமை மீண்டும் வாய்ப்பளித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, அவர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதனிடையே, மஹுவா மொய்த்ரா பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. செய்தியாளர் ஒருவர் மஹுவா மொய்த்ராவிடம் உங்கள் எனர்ஜியின் ரகசியம் என்ன என்று கேள்வி எழுப்புகிறார். அதற்கு, மஹுவா மொய்த்ரா கூறிய பதில்தான் வைரலாகி வருகிறது. ‘செக்ஸ் தான் எனது எனர்ஜியின் ரகசியம்’ என மஹுவா மொய்த்ரா பதிலளித்ததாக பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.
Some say Boost is the secret of my energy and some legend say s*x is the source of my energy 🤯 pic.twitter.com/DRVkQZ4DTq
— ꜱᴀɴᴄʜɪᴛ (@sanchit_gs)
இந்த நிலையில், மஹுவா மொய்த்ரா அளித்த பதிலின் உண்மைத்தன்மை குறித்து தெரியவந்துள்ளது. அதாவது, தனது எனர்ஜியின் ரகசியம் எக்ஸ் (Eggs - முட்டை) என்று மஹுவா மொய்த்ரா கூறியுள்ளார். அதனை திரித்து செக்ஸ் என்று பலரும் பரப்பி வைரலாக்கி வருகின்றனர் என தெரியவந்துள்ளது.
Let me clarify, since this is my interview.
I asked : What’s your source of energy in the morning.
Mahua Moitra replied : EGGS …(anda, dim)
This is ridiculous how the bhakt mandali has distorted it to make it sound like s*x. The audio is being tampered…
இதுகுறித்து அந்த கேள்வியை கேட்ட பத்திரிகையாளர் தமல் சாகா தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், “இது எனது நேர்காணல் என்பதால் நான் தெளிவுபடுத்துகிறேன். நான் மஹுவா மொய்த்ராவிடம் காலையில் உங்களின் எனர்ஜியின் ரகசியம் என்னவென்று கேட்டேன். அதற்கு EGGS என்று அவர் பதிலளித்தார்.” என தமல் சாகா தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.
She Says 'Eggs', RW trolls hears it as 'Sex'. 😏 pic.twitter.com/nIpxVfb0wZ
— Mohammed Zubair (@zoo_bear)
அதேபோல், மஹுவா மொய்தா EGGS என்று கூறுகிறார்; ஆனால், வலதுசாரி ட்ரோல் அமைப்புகள் அவர் SEX என கூறியதாக ட்ரோல் செய்து வருகின்றனர். தற்போது, அவர்கள் தங்களது ட்வீட்களை அழித்து வருகின்றனர் என உண்மை கண்டறியும் நிபுணர் முகமது ஜுபையர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம், திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மஹுவா மொய்த்ரா தனது எனர்ஜியின் ரகசியம் எக்ஸ் (Eggs - முட்டை) என்று கூறியதை திரித்து செக்ஸ் என்று பலரும் பரப்பி வைரலாக்கி வருகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.