பாகிஸ்தான் மீது  அதிரடி தாக்குதல் நடத்த ராணுவம் தயங்காது : புதிய தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் எச்சரிக்கை…

First Published Jan 2, 2017, 7:28 AM IST
Highlights


பாகிஸ்தான் மீது  அதிரடி தாக்குதல் நடத்த ராணுவம் தயங்காது : புதிய தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் எச்சரிக்கை…

இந்திய எல்லையை பாதுகாக்க அதிரடி தாக்குதல் நடத்த ராணுவம் தயங்காது என புதிய தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக இருந் தல்பீர் சிங் ஓய்வு பெற்றதையடுத்து ஜெனரல் பிபின் ராவத் புதிய தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றார். அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அமர்ஜவான் ஜோதியில் ஜெனரல் பிபின் ராவத் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்திய எல்லையில் அமைதியையும், சமாதானத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ராணுவத்திடம் உள்ளது- அதேவேளையில் இதற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், எல்லையை பாதுகாக்க அதிரடி தாக்குதல் நடத்தவும் ராணுவம் தயங்காது என தெரிவித்தார். 

ராணுவத்தின் கிழக்கு கமாண்டர் லெஃப்டினன்ட் ஜெனரல் பிரவின் பக்ஷி, தெற்கு கமாண்டர் லெஃப்டினன்ட் ஜெனரல் P.M.Hariz ஆகியோர் தொடர்ந்து பணியாற்றுவார்கள்- ராணுவத்தின் அனைத்து பிரிவுகளும் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

tags
click me!