ஆனந்த் அம்பானி - ராதிகாவின் திருமணம் - விருந்தினர்களுக்கு நீதா அம்பானி கொடுக்கப்போகும் GIFT என்ன தெரியுமா?

Ansgar R |  
Published : Feb 16, 2024, 03:30 PM ISTUpdated : Feb 16, 2024, 03:38 PM IST
ஆனந்த் அம்பானி - ராதிகாவின் திருமணம் - விருந்தினர்களுக்கு நீதா அம்பானி கொடுக்கப்போகும் GIFT என்ன தெரியுமா?

சுருக்கம்

Anant Ambani & Radhika Merchant : இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

ஆனந்தின் பெற்றோர்களான முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி திருமண விருந்தினர்களுக்கு சிறப்பு பரிசுகளை வழங்க திட்டமிட்டுள்ளனர். அந்த சிறப்பு பரிசு என்ன? என்பது குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம். இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்ட் என்பவருக்கும் வரும் மாதம் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெறவுள்ளது. 

அம்பானி குடும்பத்தில் இந்த பிரம்மாண்ட திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் மூன்று குழந்தைகளில், மூத்த மகன் ஆகாஷ் மற்றும் மகள் இஷா ஆகியோர் ஏற்கனவே திருமணம் நடைபெற்றுவிட்டது. இந்நிலையில் மற்ற இரு திருமணங்களை விட பிரமாண்டமாக நடத்த அந்த குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

கர்நாடக அரசின் இந்து திருமணச் சான்றிதழுக்கு எப்படி விண்ணப்பிப்பது? விவரம் இதோ..

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளுக்கு குஜராத்தின் ஜமன்கர் வெகு ஜோராக தயாராகி வருகின்றது. இந்தியாவில் நடைபெறும் இந்த ஆடம்பர திருமணத்திற்கு 1200க்கும் மேற்பட்ட விருந்தினர்களை அம்பானி குடும்பத்தினர் அழைத்துள்ளனர் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அதே நேரத்தில் இந்த பிரமாண்ட திருமணத்தில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு மஹாபலேஷ்வரில் இருந்து பார்வையற்ற கைவினைஞர்களால் வடிவமைக்கப்பட்ட சிறப்பு மெழுகுவர்த்திகள் பரிசளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பழங்கால கைவினைப் பொருட்களின் விலைமதிப்பற்ற பாரம்பரியத்தை ஆதரிக்கும் வகையில் இஷா அம்பானி சுவதேஷ் இந்த திட்டத்தை வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியில் பாலிவுட் நட்சத்திரங்கள் உட்பட பிரபல பாடகர்கள் கலந்து கொள்கின்றனர். திருமண வீட்டின் உட்புறத்தை ஆடம்பரமாக அலங்கரிப்பதற்கும், உணவு பரிமாறுவதற்கும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிரபலமான மற்றும் திறமையான கலைஞர்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், இந்த முழு திருமண கொண்டாட்டமும் பிரபலங்களின் விருப்பமான ஆடை வடிவமைப்பாளரான மணீஷ் மல்ஹோத்ராவின் கிரியேட்டிவ் டைரக்ஷனில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில தகவல்களின்படி, அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஏப்ரல் முதல் ஜூலைக்குள் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர் என்று கூறப்படுகிறது.

திருமணத்தில் ஆனந்த் மற்றும் ராதிகா நடனமாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடனப் பயிற்சிக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கு அறுசுவை உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

ராகுல் காந்தியை ஜீப் ரேங்லரில் அழைத்து சென்ற தேஜஸ்வி யாதவ்: இன்று மாலை உ.பி.க்குள் நுழையும் நியாய யாத்திரை!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

திருவனந்தபுரத்துக்கு நன்றி.. கேரள அரசியலில் பெரும் திருப்புமுனை.. பிரதமர் மோடி பெருமிதம்!
கேரள உள்ளாட்சித் தேர்தலில் பாஜக கெத்து..! மும்தாஜ் தாஹா, ஸ்ரீலேகா.. சிங்கப் பெண்களை வைத்து மாஸ் வெற்றி!