ரூ.5 லட்சத்தில் மருத்துவ காப்பீடு...! மக்கள் நலனில்  மத்திய அரசு...! விரைவில்..

 
Published : Jan 19, 2018, 04:24 PM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
ரூ.5 லட்சத்தில் மருத்துவ காப்பீடு...! மக்கள் நலனில்  மத்திய அரசு...! விரைவில்..

சுருக்கம்

All will get medi claim worth 5 lakhs said cent govt

அனைவருக்கும் மருத்துவ காப்பீடு...! விரைவில்... மக்கள் நலனில்  மத்திய அரசு...!

அனைவருக்கும் மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டத்தை, மத்திய அரசு பட்ஜெட்டில் அறிமுகம் செய்யவுள்ளது.

இந்திய சுகாதாரக் கூட்டமைப்பான ‘NAT HEALTH'  அனைவருக்கும் கட்டாய மருத்துவக் காப்பீடு பற்றி அறிக்கை வெளியிட்டு இருந்தது.

மொத்தம் உள்ள இந்திய  மக்கள்  தொகையில், 4% பேர் மட்டுமே மருத்துவக் காப்பீடு வைத்துள்ளதாகவும், மீதமுள்ள 86% பேர்  பணத்தை  நேரடியாக  செலுத்தியே   மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று  வருகின்றனர்.

எனவே, இதனை தவிர்க்கும் பொருட்டு, அனைவருக்கும் மருத்துவ காப்பீடு  வழங்க  ஏதுவாக  இந்த  திட்டம் விரைவில்  அமல்படுத்த  திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது .

 அதன் படி,

வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள உள்ளதால், அப்போது  மருத்துவ காப்பீடு  குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியும்  என  எதிர்பார்க்கப் படுகிறது.

அதுமட்டுமில்லாமல் இதற்காக ரூ.5,000 கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியை கொண்டு ஒவ்வொரு  இந்திய  குடிமகனும் ரூ .5,00,000 மதிப்பிலான  சிகிச்சையை  பெற்றுக் கொள்ள  முடியும்.

இந்த  திட்டம் அமலுக்கு வரும் தருவாயில் ஏழை எளிய மக்கள் சிரமம் இன்றி, நல்ல  பயன்  அடைவர்

PREV
click me!

Recommended Stories

கீபேட் போன் இருந்தா போதும்.. பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதித்த கிராமம்!
ஒரு லட்சம் ரூபாய்க்கு காண்டம் வாங்கிய சென்னை நபர்! மிரளவிட்ட ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ரிப்போர்ட்!"