Bank Holiday: வங்கிக்கு 5 நாட்கள் விடுமுறை!.. வாடிக்கையாளர்களே உஷார்!! எப்போது தெரியுமா.?

By Raghupati RFirst Published Jan 25, 2023, 3:16 PM IST
Highlights

வங்கி வாடிக்கையாளர்களே உங்களுக்கான முக்கிய செய்தி தான் இது. மறக்காம படிங்க.

வங்கி வாடிக்கையாளர்களா? நீங்கள், அடுத்த வாரத்தில் ஏதேனும் வேலைக்காக வங்கிக்குச் செல்ல திட்டமிட்டு இருந்தீர்கள் என்றால் நிச்சயம் இதை படித்துவிட்டு செல்லுங்கள்.

நாளை முதல் 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பேசிய  பணியாளர் சம்மேளனத்தை சேர்ந்தவர்கள், ஐந்து நாள் வேலை வாரத்தை அறிமுகப்படுத்துதல், அனைத்து பணியாளர்களிலும் போதுமான ஆட்சேர்ப்பு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மாற்றுதல் உள்ளிட்ட பல அம்சங்களை கோரி வருகிற ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினர்.

இதையும் படிங்க..ஜனவரி 27 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

வங்கி சங்கங்களின் ஐக்கிய மன்றம் (UFBU), நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இதன் காரணமாக குடியரசு தின விழா மற்றும் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக நாளை முதல் வங்கிகள் ஐந்து நாட்கள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பழைய ஓய்வூதியத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் வருகிற 30ம் தேதி (திங்கள்) மற்றும் 31ம் தேதி (செவ்வாய்) ஆகிய இரண்டு நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட உள்ளது. அன்றைய தினங்களில் தமிழக முற்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து பொது வங்கிகளும் இயங்காது என்று கூறப்பட்டுள்ளது.

நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு அரசு விடுமுறை, வரும் 28 ஆம் தேதி, 4வது சனிக்கிழமை என்பதாலும், அன்றைய தினமும் விடுமுறை. அதேபோல மறுநாள் 29 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை நாள் ஆகும். இடையில் உள்ள நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் வங்கிகள் செயல்படும்.

வங்கிகள் ஐந்து நாட்கள் செயல்படாததால் வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. எனவே வங்கி வாடிக்கையாளர்கள் இதற்கேற்ப தங்களது வேலை திட்டங்களை அமைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க..ஓய்வூதியம் 7500 ரூபாயில் இருந்து 25000 ரூபாயாக உயரப்போகிறது.. ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு EPFO முக்கிய செய்தி

இதையும் படிங்க..Viral video: பெங்களூரில் கொட்டிய பண மழை.. நடுரோட்டில் கிடந்த பணத்தை அள்ளிய பொதுமக்கள் - யாருப்பா அந்த ஆளு.?

click me!