லேண்டிங் கியர் செயல் இழப்பு... பெங்களூருவில் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

Published : Jul 12, 2023, 01:36 PM IST
லேண்டிங் கியர் செயல் இழப்பு... பெங்களூருவில் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

சுருக்கம்

விமானிகள் இருவரும் பத்திரமாக விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கியதாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உறுதி செய்துள்ளது.

ஃப்ளை பை வயர் பிரீமியர் 1ஏ விமானம் ஒன்று அதன் லேண்டிங் கியரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால், பெங்களூரில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அவசரமாக தரையிறக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தின் போது, ​​விமானத்தில் இரண்டு விமானிகள் இருந்ததாகவும், பயணிகள் யாரும் இல்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) அதிகாரப்பூர்வ அறிக்கையில், “பெங்களூரு ஹெச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்குப் புறப்பட்ட ப்ளை பை வயர் பிரீமியர் 1ஏ விமானம் லேண்டிங் கியர் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது."

பாக்ஸ்கான் - வேதாந்தா ஒப்பந்த முறிவு: ஜெய்ராம் ரமேஷுக்கு பதிலடி கொடுத்த அமித் மாளவியா

"விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. இரண்டு விமானிகளும் பத்திரமாக இருந்தனர். மேலும் பயணிகள் யாரும் விமானத்தில் இல்லை" என்று விமானப் போக்குவரத்து இயக்குநரகமும் உறுதி செய்துள்ளது. இயக்குநகரம் பகிர்ந்துள்ள சம்பவத்தின் வீடியோவில் விமானம் ஓடுபாதையில் பாதுகாப்பாக தரையிறங்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

ஒரு விமானம் புறப்படும்போது தரையிறங்குவதற்கு முன் திட்டமிடாத சூழலில் புறப்பட்ட இடத்துக்கே திரும்பும் சூழ்நிலை 'ஏர்டர்ன்பேக்' என்று அழைக்கப்படுகிறது. 'ஏர்டர்ன்பேக்' க்கு மிகவும் பொதுவான காரணம், விமானம் புறப்படும்போது அல்லது சிறிது நேரத்தில் ஏற்பட்ட அவசரநிலை அல்லது அசாதாரண சூழ்நிலை ஆகும். இது பொதுவாக என்ஜின் செயலிழப்பு காரணமாக நிகழ்கிறது.

பாலியல் வழக்கு குறித்து கேட்டதால் ஆத்திரத்தில் பெண் செய்தியாளரின் மைக்கை உடைத்துப் போட்ட பிரிஜ் பூஷன்!

PREV
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!