கேரள பேராசிரியர் ஜோசப் கையை வெட்டிய வழக்கு.! 6 பேர் குற்றவாளி! என்ஐஏ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

By vinoth kumar  |  First Published Jul 12, 2023, 12:49 PM IST

கடந்த 2010ம் ஆண்டு கேரளாவில் கல்லூரி விரிவுரையாளர் டி.ஜே.ஜோசப் சர்ச்சைக்குரிய வகையில் வினாத்தாள் தயாரித்ததாக கூறி ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில், விரிவுரையாளர் ஜோசப்பின் வலது கைது துண்டிக்கப்பட்டது. 


கேரளாவில் கடந்த 2010ஆம் கல்லூரி பேராசிரியர் ஒருவரின் கையை வெட்டிய வழக்கில், தடைசெய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (பிஎஃப்ஐ) உறுப்பினர்கள் என கூறப்படும் 6 பேர் குற்றவாளிகள் என கேரளாவின் சிறப்பு என்ஐஏ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) கீழ் கொலை முயற்சி, சதி மற்றும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக அவர்களை குற்றவாளிகள் என வழக்கு தொடர்பான இரண்டாம் கட்ட விசாரணையின் போது, சிறப்பு என்ஐஏ நீதிமன்ற நீதிபதி அனில் கே பாஸ்கர் தீர்ப்பளித்துள்ளார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- அசோக் கெலாட் - சச்சின் பைலட் சமரசம்: ராஜஸ்தான் காங்கிரஸில் அதிரடி மாற்றம்!

குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேரை விடுதலை செய்தும் கேரளாவின் சிறப்பு என்ஐஏ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பான முதற்கட்ட விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்ட 31 பேர் மீது நீதிமன்றம் விசாரணை நடத்தியது. அதில், 10 பேர் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம், வெடிபொருட்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் என கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக மூன்று பேர் குற்றவாளிகள் எனவும் அப்போது நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. முதற்கட்ட விசாரணையின் போது, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 18 பேரை நீதிமன்றம் விடுதலை செய்தது.

இடுக்கி மாவட்டத்தில் உள்ள தொடுபுழாவில் உள்ள நியூமன் கல்லூரியின் பேராசிரியரான டி.ஜே ஜோசப்பின் வலது கை, கடந்த 2010ஆம் ஆண்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் செயற்பாட்டாளர்களால் வெட்டப்பட்டது. எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள மூவாட்டுபுழாவில் உள்ள தேவாலயத்துக்கு சென்று விட்டு வீடு திரும்பியபோது, அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதையும் படிங்க;-  பாக்ஸ்கான் - வேதாந்தா ஒப்பந்த முறிவு: ஜெய்ராம் ரமேஷுக்கு பதிலடி கொடுத்த அமித் மாளவியா

பேராசிரியரை அவர் சென்ற வாகனத்தில் இருந்து வெளியே இழுத்து கீழே போட்டு தாக்கிய 7 பேர் கொண்ட கும்பல், இறுதியாக அவரது கையை துண்டித்தது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சவாத் இன்னும் தலைமறைவாக உள்ளார்.

நியூமன் கல்லூரியில் பிகாம் செமஸ்டர் தேர்வுக்கான வினாத்தாளில் மதத்தை இழிவுபடுத்தும் கருத்துக்களை கேட்டதற்காக பேராசியர் ஜோசப்பை கொலை செய்ய குற்றம் சாட்டப்பட்டவர்கள் முயற்சித்ததாக ஆரம்பத்தில் இந்த வழக்கை விசாரித்த காவல்துறை தெரிவித்திருந்தது.

click me!