செட்டிநாடு சிக்கன் முதல் மீன் குழம்பு வரை.. ஏர் இந்தியாவின் புதிய உணவு மெனு - பயணிகள் மகிழ்ச்சி !

By Raghupati R  |  First Published Oct 3, 2022, 8:54 PM IST

ஏர் இந்தியா நிறுவனம் தன்னுடைய பயணிகளுக்கு புதிய உணவு வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.


ஏர் இந்தியா தனது உள்நாட்டு பயணிகளுக்காக பிரத்யேகமான உணவு மெனுவை அறிமுகப்படுத்தியுள்ளது. டாடா குழுமத்தின் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கான இந்த புதிய உணவு மெனு நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏர் இந்தியா விமானம் தனது உள்நாட்டு பயணிகளுக்காக புதிய மனுவை இன்று அதாவது அக்டோபர் 3ஆம் தேதி வெளியிட்டுள்ளது. இதன்படி டாடா குழுமத்தின் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் புதிய மெனுவில் உள்ள உணவை இன்று முதல் ருசிப்பார்கள். அதன் பட்டியல் இங்கு பார்க்கலாம். 

Tap to resize

Latest Videos

இந்த புதிய உணவு மெனுவில் பிசினஸ் வகுப்பு உள்நாட்டு பயணிகளுக்கு ஆலு பரோட்டா, மெது வடை மற்றும் பொடி இட்லி ஆகியவை காலை உணவாக வழங்கப்படும். மதிய உணவாக மீன் குழம்பு, சிக்கன் செட்டிநாடு, உருளைக்கிழங்கு பொடிமாஸ் உடன் கூடிய சாப்பாடு வழங்கப்படும்.

இதையும் படிங்க..ஆஃபர் லெட்டரை ரத்து செய்யும் விப்ரோ, இன்ஃபோசிஸ் & டெக் மஹிந்திரா.! அதிர்ச்சியில் ஐ.டி இளைஞர்கள் !!

இதை தவிர சர்க்கரை இல்லாத டார்க் சாக்லேட் ஓட்மீல் மஃபின், சீஸ் மற்றும் ட்ரபிள் ஆயில் துருவல் முட்டை, கடுகு கிரீம் தடவப்பட்ட சிக்கன் சாசேஜ் போன்ற உணவு வகைகளும் பிசினஸ் வகுப்பு பயணிகளுக்கான உணவு மெனுவில் இடம்பெற்றுள்ளது.

பிசினஸ் கிளாஸ் பயணிகளுக்காக காலை சிற்றுண்டி,  பட்டரி அண்ட் ஃப்ளாக்கி குரோய்சன்ட், சுகர்-ப்ரீ டார்க் சாக்கலேட் ஓட்மீல் முஃபின், சீஸ் அண்ட் ட்ருஃபில் ஆயில் ஸ்க்ராம்பெல்ட் எக் வித் சிவ்ஸ், மஸ்டர்டு கிரீம் கோடட் சிக்கன் சாசேஜ், ஆலு பரோட்டா, மெதுவடை, பொடி இட்லி வழங்கப்படும். மதிய உணவாக  ஃபிஷ் கறி,  சிக்கன் செட்டினாட், பொடேடோ பொடிமாஸ் வழங்கப்படும். இரவு உணவாக  சிக்கன் 65, கிரில்டு ஸ்லைஸ்டு பெஸ்டோ சிக்கன் சான்விஜ், மும்பை பாடாடவாடா ஆகியவை வழங்கப்படும்.

இதையும் படிங்க..“மருத்துவமனையில் சவுக்கு சங்கர்.. முதல்வருக்கு பறந்த கடிதம் !” அடுத்து என்ன ? பரபரப்பு சம்பவம்

எகானமி கிளாஸ் பயணிகளுக்காக காலை சிற்றுண்டி சீஸ் மஷ்ரூம் ஆம்லெட்,  ட்ரை ஜீரா ஆலூ வெட்ஜெஸ், கார்லிக் டோஸ்டு ஸ்பைனாச் அண்ட் கான் ஆகியவை வழங்கப்படும். மேலும் மதிய உணவாக  வெஜிடபிள் பிரியாணி, மலபார் சிக்கன் கறி, மிக்ஸ்டு வெஜிடபிள் பொறியல் ஆகியவையும் வழங்கப்படும். இரவு உணவாக  வெஜிடபிள் ஃபிரைட் நூடுல்ஸ், சில்லி சிக்கன், ப்ளூபெர்ரி வெண்ணிலா பாஸ்ட்ரி, காஃபி ட்ருஃபில் ஸ்லைஸ் ஆகியவை வழங்கப்படுகிறது.

விமான பயணிகளுக்கு புதிய உணவு மெனுவை ஏர் இந்தியா அறிமுகப்படுத்தி இருப்பது பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் தொடங்கப்பட்ட ஆகாச ஏர் மற்றும் ஏர் ஏசியா, விஸ்தாரா ஆகிய விமான நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய மெனுக்களை அறிவித்ததால் ஏர் இந்தியா நிறுவனமும் புதிய மெனு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க..உட்கட்சியில் உள்குத்து.! கோபத்தில் ஆக்சனில் இறங்கிய ஸ்டாலின் - திமுக தொண்டர்கள் டூ அமைச்சர்கள் ஷாக் !

click me!