கொடியேறி பாலகிருஷ்ணனின் இறுதி ஊர்வலம்... இரண்டரை கி.மீ. உடலை தோளில் சுமந்து சென்றார் பினராயி விஜயன்!!

By Narendran SFirst Published Oct 3, 2022, 8:17 PM IST
Highlights

கேரள சிபிஎம் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் இறுதி ஊர்வலத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உடலை தனது தோளில் சுமந்து சென்றார். 

கேரள சிபிஎம் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் இறுதி ஊர்வலத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உடலை தனது தோளில் சுமந்து சென்றார். கேரள சிபிஎம் கட்சியின் முன்னாள் மாநில செயலாளரும் மூத்த கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான கொடியேறி பாலகிருஷ்ணன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி கடந்த அக்.1 ஆம் தேதி காலமானார். இதை அடுத்து அவரது உடல் தலைச்சேரியில் உள்ள டவுன்ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: நைஜீரியாவில் இருந்து வந்த சிறுத்தையில் லம்பி வைரஸ் பரவுகிறது.. மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோலே கருத்து

அவரது உடலுக்கு செங்கொடி போர்த்தப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அவரது உடல் தலைச்சேரியில் இருந்து கன்னூருக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது வழி நெடுங்கிலும் ஆயிரக்கணக்கான மக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் கொடியேறி பாலகிருஷ்ணன் இறுதி ஊர்வலத்தில் கேரளா முதலமைச்சர் பினராயின் விஜயன் கலந்துக்கொண்டு அவரது உடலை சுமார் இரண்டரை கிலோமீட்டர் தோளில் சுமந்த படி சென்றார்.

இதையும் படிங்க: பீர் கேன்களுடன் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்... இணையத்தில் வைரலான வீடியோ!!

அவருடன் சிபிஎம் பொதுசெயலாளர் சீதாராம் யெச்சூரியும் அவரது உடலை சுமந்து சென்றார். இதை அடுத்து அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக பேசிய பினராயி விஜயன், கொடியேரி பாலகிருஷ்ணனின் மறைவு கட்சிக்கும், அரசியலுக்கும் மிகப்பெரிய இழப்பு என்று தெரிவித்திருந்தார். மேலும் பினராயி விஜயன் கோடியேரி பாலகிருஷ்ணனின் உடலுக்கு அருகில் அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது. 

click me!