ஆடுதாம் ஆந்திரா விளையாட்டு போட்டியில் ஊழல் நடைபெற்றதாகக் கோரி முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு.
1990களில் சினிமா துறையில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த ரோஜா 1998ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்த நிலையில், ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு தீவிர கட்சி பணி ஆற்றினார். அதன் விளைவாக 2014ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
SA Vs WI: ஒரே நாளில் 17 விக்கெட், SA பேட்ஸ்மேன்களை அலறவிடும் WI பௌலர்கள்
அதன் பின்னர் மீண்டும் நகரி தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றார். இறுதியாக கடந்த 2 ஆண்டுகள் அமைச்சரவையில் இடம் பெற்ற ரோஜாவுக்கு விளையாட்டு துறை மற்றும் சுற்றுசூழல் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவர் அமைச்சராக இருந்த போது மாநிலம் முழுவதும் ”“ஆடுதாம் ஆந்திரா” என்ற பெயரில் அரசு சார்பில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதற்காக அப்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ரூ.150 கோடியை ஒதுக்கீடு செய்தார்.
பட்டு போன்ற கூந்தலுக்கு கைகொடுக்கும் கற்றாழை ஜெல்; 6 எளிய வழிகள்
இதனிடையே இந்த திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக நடிகை ரோஜா மீது பல்வேறு தரப்பினரும் ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக முறையான விசாரணை நடத்தக் கோரி விஜயவாடா சிஐடி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், ரோஜா உட்பட இருவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைவில் நடிகை ரோஜாவிடம் விசாரணை நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.