கல்லுரி முதல்வரின் சதி.. கொல்கத்தா பெண் மருத்துவர் இறந்த பின்னர் பாலியல் வன்கொடுமை.. திடுக்கிடும் தகவல்..

Published : Aug 16, 2024, 10:11 AM ISTUpdated : Aug 16, 2024, 11:37 AM IST
கல்லுரி முதல்வரின் சதி.. கொல்கத்தா பெண் மருத்துவர் இறந்த பின்னர் பாலியல் வன்கொடுமை.. திடுக்கிடும் தகவல்..

சுருக்கம்

கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் விவகாரத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் தாக்கப்பட்டு, பின்னர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், கல்லூரி முதல்வர் உட்பட பலர் சதி செய்ததாகவும் கூறப்படுகிறது.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முதுகலை பயிற்சி பெண் மருத்துவர் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஆகஸ்ட் 9 அன்று இந்த கொடூர சம்பவம் அரங்கேறியது. பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டதாக முதலில் குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது. எனினும், கொலை செய்யப்படுவதற்கு முன்னர் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது பின்னர் தெரியவந்தது. பெண் மருத்துவரின் கொடூர கொலையை எதிர்த்து நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றன்ர். சிபிஐ தற்போது இந்த வழக்கின் சாரணையை கையில் எடுத்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக தினமும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது பெண் மருத்துவர் ஒருவர் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான ஆடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உயிரிழந்த பெண் மருத்துவர் முதலில் கொடூரமாக தாக்கப்பட்டதாகவும், பின்னர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். கல்லூரி முதல்வர், மூத்த மருத்துவர் மற்றும் சம்பந்தப்பட்ட துறைத் தலைவர் ஆகியோர் இந்தச் சதிச் செயலில் ஈடுபட்டதாக ஆடியோ வெளியிட்ட பெண் மருத்துவர் தெரிவித்துள்ளார்..

Karnataka Couple Murder: காலையில் காதல் கல்யாணம்! மாலையில் கொலை! அந்த ரூமில் நடந்தது என்ன?

பாஜகவின் தேசிய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் பொறுப்பாளர் அமித் மால்வியா சமூக ஊடக தளமான X பக்கத்தில் அந்த ஆடியோவை பகிர்ந்துள்ளார். அந்த ஆடியோவில் “  மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதல்வர், துறைத் தலைவர் ஆகியோர் பல்வேறு காரணங்களை கூறி மாணவர்களிடம் பணம் வசூலிப்பதாக அவர் கூறினார். பணம் செலுத்தவில்லை என்றால் பயிற்சியை  முடித்ததற்கான சான்றிதழ் தரமாட்டோம், மருத்துவப் படிப்பை பதிவு செய்ய மாட்டோம் என மாணவர்களை மிரட்டுகின்றனர்.

ஆர்.ஜே.கர் மருத்துவ கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ் முன்னாள் மாணவர்கள் மற்றும் சில பணியாளர்கள், பயிற்சி மருத்துவர்களை கொண்டு செக்ஸ் ராக்கெட், போதைப் பொருள் வியாபாரம் செய்து வருகிறார். ஹெராயின், பிரவுன் சுகர் போன்ற போதைப் பொருட்கள் மட்டுமின்றி, மலிவான தரமற்ற மருந்துகளையும் விற்பனை செய்து வருகிறார். இதற்காக பல மருந்து நிறுவனங்களிடம் கோடிக்கணக்கான டெண்டர் போடப்பட்டுள்ளது. மேலும் அவர் பல கோடிகளை அவர் லஞ்சமாக பெற்றுள்ளார்.

 

அவருக்கு கட்சியுடனும், உயர் அதிகாரிகளிடம் நல்ல செல்வாக்கு உள்ளது. எந்த பயிற்சி மருத்துவர் தேர்ச்சி பெற வேண்டும் என்பதை அவர் தான் முடிவு செய்கிறார். இதற்காக மருத்துவ மாணவர்கள் பணம் செலுத்த வேண்டும் என்று தனது குழுவை கொண்டு மிரட்டுகிறார்.

உயிரிழந்த மருத்துவ மாணவி நன்றாக படிக்கக்கூடியவர். ஆனால் அவரை கல்லூரி முதல்வர் தொடர்ந்து மிரட்டி உள்ளார். அவரின் தீசிஸை சமர்ப்பிக்கவும் அவர் அனுமதி வழங்கவில்லை. ஆனால் அந்த மாணவி கல்லூரி முதல்வரை அம்பலப்படுத்துவதாக கூறி அவருக்கு எதிராக போராடி வந்துள்ளார். ஆனால் உயிரிழந்த மாணவி தொடர்ந்து மிரட்டப்பட்டு வந்துள்ளார். 6 மாதமாக இது நடந்துள்ளது. 

சென்னையில் ரவுடிகளை வெறித்தனமாக வேட்டையாடும் போலீஸ்! அதிகாலையிலேயே துப்பாக்கி சத்தம்! அலறும் தலைநகர்!

முதலில் நைட் ஷிப்ட் கொடுத்துள்ளனர். தொடர்ந்து 36 மணி நேரம் பணியாற்றும் படி டார்ச்சர் செய்துள்ளனர். துறை தலைவருக்கும் இது தெரியும். அப்படி இந்த கொலையை அவர்கள் திட்டமிட்டு அரங்கேற்றி உள்ளனர். சம்பவம் நடந்த செமினார் அறைக்கும் தினமும் பல மாணவ, மாணவிகள் ஓய்வெடுக்க செல்வது வழக்கம். அன்றைய தினம் அந்த மாணவியை அந்த ரூமுக்கு போகும் படி அவர்கள் கூறியுள்ளனர். அப்போது அந்த 4 பேர் இருந்துள்ளனர். அதில் ஒரு மாணவியும் இருந்துள்ளார். அவர்களை டாக்டர்கள் என்று அழைப்பதை விட மிருகங்கள் என்று அழைக்கலாம். 

அப்போது அந்த பெண்ணை தூங்க சொல்லி அவர்கள் கூறியுள்ளனர். மேலும் அவர்கள் மது அருந்திவிட்டு வந்துள்ளனர். பின்னர் 7 முதல் 8 பேர் வந்து கொடூரமாக அவரை தாக்கி உள்ளனர். மேலும் அந்த பெண்ணை திருப்பி படுக்க வைத்து அவர் மீது ஷூ உடன் நடந்துள்ளனர். இதை எல்லாம் செய்த பிறகு அவரை கழுத்தை ந்றித்து கொலை செய்துள்ளனர். பின்னர் கீழே இறங்கி வந்த போது அங்கு சஞ்சய் (கைது செய்யப்பட்ட குற்றவாளி) சிலருடன் அமர்ந்துள்ளார். 

செமினார் ரூமில் உனக்காக ஒன்றை வைத்துள்ளோம்.. பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர். அதன்பின்னரே சஞ்சய் இறந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதனால் அவரின் பிறப்புறப்பில் சஞ்சயின் விந்தணு இருந்துள்ளது. ஆனால் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அன்றைய தினம் பயிற்சி மருத்துவர்கள் அந்த இடத்தில் இருந்த ரத்தக்கறைகளை சுத்தம் செய்துள்ளனர்.” என்று கூறியுள்ளார்.

பெண் மருத்துவரின் இந்த தகவல் மக்கள் மத்தியில் கடும் கோபத்தையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மேலும் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகள் இதுபோன்ற கேவலமான செயல்களில் ஈடுபடுவது மருத்துவ நிறுவனங்களில் பாதுகாப்பு மற்றும் நெறிமுறைகள் குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது.

இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடந்து வரும் நிலையில் பயிற்சி மருத்துவருக்கு நீதியை உறுதி செய்வது முக்கியம். பயிற்சி மருத்துவர்களை கல்வி நிறுவனங்களில் சுரண்டல் மற்றும் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்க கடுமையான நடவடிக்கைகள் தேவை என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

PREV
click me!

Recommended Stories

நாடாளுமன்றம் வரை சென்ற திருப்பரங்குன்றம்..! டெல்லியிலும் புயலை கிளப்பும் திமுக!
Putin in India: புதினுக்கு பகவத் கீதையை பரிசாக வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி