Latest Videos

Varalaxmi Sarathkumar : பிரதமர் மோடியை குடும்பத்துடன் நேரில் சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம் தெரியுமா?

By vinoth kumarFirst Published Jun 29, 2024, 7:58 AM IST
Highlights

நடிகர் சரத்குமாரின் மகளான இவருக்கு வருகிற ஜூலை 3ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. மும்பையை சேர்ந்த நிகோலாய் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த வரலட்சுமி அவரை தான் கரம்பிடிக்க உள்ளார். 

டெல்லியில் பிரதமர் மோடியை பாஜக பிரமுகரும் நடிகருமான சரத்குமார் குடும்பத்துடன் நேரில் சந்தித்து வரலட்சுமி திருமணத்து அழைப்பு விடுத்துள்ளார். 

தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் பிசியான ஹீரோயினாக வலம் வருபவர் வரலட்சுமி. இவர் தமிழ் சினிமாவில் போடா போடி, சர்கார், சண்டக்கோழி 2, தாரை தப்பட்டை போன்ற பல படங்களில் கதாநாயகியாகவும், வில்லியாகவும் நடித்துள்ளார். நடிகர் சரத்குமாரின் மகளான இவருக்கு வருகிற ஜூலை 3ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. மும்பையை சேர்ந்த நிகோலாய் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த வரலட்சுமி அவரை தான் கரம்பிடிக்க உள்ளார். இவர்களது திருமணம் தாய்லாந்திலும், திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் நடைபெற உள்ளது. 

இதையும் படிங்க: கொஞ்ச நேரம் "GOAT" விஜயான பிரசன்னா.. Recreate செய்யப்பட்ட "சின்ன சின்ன கண்கள்" பாடல் - சினேகா செம ஹாப்பி!

வரலட்சுமியின் திருமணத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருமண அழைப்பிதழ் கொடுக்கும் வேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன், நயன்தாரா, சித்தார்த் என ஏராளமான பிரபலங்களை நேரில் சந்தித்து  வரலட்சுமி அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்.

இதையும் படிங்க:  விஜய்சேதுபதியின் ஹிட் படம்.. "கண்டிப்பா நான் பார்க்கமாட்டேன்" - சின்மயி ட்வீட் வைரல் - யார் மேல்.. என்ன கோவம்?

இந்நிலையில், தலைநகர் டெல்லிக்கு நேரடியாக சென்று பிரதமர் நரேந்திர மோடியை நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார், மகள் வரலட்சுமி, வருங்கால மருமகன் நிகோலாய் ஆகியோர்  குடும்பத்துடன் நேற்று சந்தித்தனர். அப்போது நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியடைந்து, இந்தியாவின் வரலாற்று சாதனையாக மூன்றாவது முறையாக பிரதமராக தேர்வானதற்கு வாழ்த்துகளை  தெரிவித்ததுடன் மகள் வரலஷ்மி - நிக்கோலை ஆகியோரின் திருமண வரவேற்பில் கலந்து கொள்ள  திருமண அழைப்பிதழையும் வழங்கினர்.

click me!