FATF : கடந்த ஜூன் 26 மற்றும் ஜூன் 28ம் தேதிக்கு இடையில், சிங்கப்பூரில் நடைபெற்ற FATF கூட்டத்தில், இந்தியாவின் Mutual Evaluation அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வது பற்றிய FATFயின் அறிக்கை
"பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பது மற்றும் பணமோசடியை தடுக்க இந்திய அரசாங்கம் சிறந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்தியாவைத் தவிர, G20ன் நான்கு நாடுகள் மட்டுமே பணமோசடியை தங்கள் நாட்டில் இருந்து ஒழிப்பதில் வெற்றி பெற்றுள்ளன" என்று FATF அறிக்கை வெளியிட்டுள்ளது. 2023-24ல் FATF நடத்திய பரஸ்பர மதிப்பீட்டில் (Mutual Evaluation) இந்தியா சிறந்த இடத்தை பெற்றுள்ளது.
மீனவர்களின் நலன் காக்க மத்திய அரசு முன்னுரிமை: முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெய்சங்கர் பதில்
2024 ஜூன் 26 முதல் ஜூன் 28 வரை சிங்கப்பூரில் நடைபெற்ற FATF கூட்டத்தில், இந்தியாவின் பரஸ்பர மதிப்பீட்டு அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
FATF அறிக்கையில், இந்தியாவை "வழக்கமான பின்தொடர்தல்" கொண்ட நாடுகளின் பிரிவில் சேர்த்துள்ளது. இந்த பிரிவில் நான்கு ஜி20 நாடுகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன என்பது தான் குறிப்பிடத்தக்கது. அதாவது தங்களது நாட்டில், பணமோசடி (Money Laundering) மற்றும் பயங்கரவாத நிதியுதவியை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளில், தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வரும் நாடுகள் என்று அர்த்தம்.
செங்கோலை அகற்ற கோரிய சமாஜ்வாதி எம்.பி.. பாஜக - இந்தியா கூட்டணி தலைவர்களிடையே வார்த்தை போர்..