தெலங்கானா மாநிலத்தில் இன்று அதிகாலை தேசிய நெடுஞ்சாலையில் லாரிகள் ஒன்றோடொன்று வேகமாக மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தெலங்கானா மாநிலம், மெதக் மாவட்டம் வைத்தியராம் கிராமம் அருகே இன்று அதிகாலை முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் மோதிய லாரியின் டிரைவர், கிளீனர் மற்றும் அதில் பயணித்த இரண்டு பேர் என மொத்தமாக 4 பேர் உடல் நசங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஒற்றை சான்றிதழுக்காக பல ஆண்டுகளாக காக்க வைக்கப்படுகிறோம்; மதுரையில் பழங்குடி மக்கள் போராட்டம்
மேலும் 4 பேர் விபத்தில் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சாலையில் அடிபட்டு உயிருக்கு போராடியவருக்கு உதவாமல் சட்டை பையை துழாவிய ஆசாமி; தென்காசியில் பரபரப்பு
இதே போன்று கர்நாடகா மாநிலம், ஹாவேரி மாவட்டம் பைடாகி பகுதியில் நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்.