NDA Maharashtra Budget : மகாராஷ்டிராவில் ஆட்சி செய்யும் NDA அரசு, தங்களது பட்ஜெட் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் அமித் மாளவியா, மகாராஷ்டிர மக்களுக்கான அரசு (பட்ஜெட்) அறிவிப்புகளின் பட்டியலை வெளியிட்டு, காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியை கடுமையாக சாடி பேசினார். NDA அறிவிப்புகளை மட்டுமே அறிவிக்கும் கட்சியல்ல, மாறாக சொல்வதை செயல்படுத்தும் அரசு தான் NDA என்று கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா அரசின் பட்ஜெட் அறிவிப்பு
மகாராஷ்டிராவின் என்டிஏ அரசு மாநில பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் அமித் மாளவியா, மகாராஷ்டிரா மக்களுக்கான அரசு அறிவிப்புகளின் பட்டியலை வெளியிட்டார். அதில் இளைஞர்கள், பெண்கள் என்று பலரும் பயன்பெறும் வண்ணம் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
வரும் ஜூலை 1ம் தேதி முதல் தொடங்கும், முதலமைச்சரின் "மஜி லட்கி பெஹன் யோஜனா" திட்டத்தின் கீழ், 21 முதல் 60 வயதுடைய, தகுதியுள்ள பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,500 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..
அதே போல "முதலமைச்சர் அன்னபூர்ணா யோஜனா" திட்டத்தின் கீழ், 52 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஆண்டுக்கு மூன்று இலவச எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்படும்.
மேலும் வேலையில்லாத இளைஞர்களுக்கு, "முதல்வர் யுவ காரிய பிரஷிக்ஷன் யோஜனா" திட்டத்தின் கீழ் 10 லட்சம் பயிற்சியாளர்களுக்கு ரூ.10,000 மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும். அடுத்தபடியாக 46 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளின் விவசாய பம்ப் மின் கட்டணத்தை அரசு தள்ளுபடி செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளை பொறுத்தவரை 2023-24 காரீஃப் பருவத்தில் பருத்தி மற்றும் சோயாபீன் விவசாயிகளுக்கு இரண்டு ஹெக்டேர் எல்லைக்குள், ஹெக்டேருக்கு ரூ.5000 உதவி வழங்கப்படும். மேலும் வெங்காய விவசாயிகளுக்கு மானியமாக 2023-24ல் ஒரு குவிண்டாலுக்கு 350 என்று விகிதத்தில் ரூ. 851.66 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.
“மைகல் தைலா சோலார் பவர் பம்ப்” மூலம், விவசாயிகளுக்கு பகல் நேரத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க ரூ.15,000 கோடி முதலீட்டிய செய்யப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 8.50 லட்சம் பேர் பயன்பெறுவர். பெண்களுக்கான இலவச உயர்கல்வி - ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு கல்விக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் 100% திருப்பிச் அளிக்கப்படும்.
மும்பை, தானே மற்றும் நவி மும்பையில் எரிபொருள் விலை குறைக்கப்படும், பெட்ரோல் விலை லிட்டருக்கு 65 காசுகள் குறைக்கப்படும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.07 குறைக்கப்படும். உடல்நலக் காப்பீட்டுத் தொகை ஒரு குடும்பத்திற்கு ரூ. 1,50,000லிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படும்.
செங்கோலை அகற்ற கோரிய சமாஜ்வாதி எம்.பி.. பாஜக - இந்தியா கூட்டணி தலைவர்களிடையே வார்த்தை போர்..