ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த தொழிலதிபர் தற்போது மன்னிப்புக் கோரி, போலீஸில் புகார் கொடுக்க வேண்டாம், தனது மனைவி, பிள்ளைகள் பாதிக்கப்பட விரும்பவில்லை என கெஞ்சியுள்ளார்.
ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த தொழிலதிபர் தற்போது மன்னிப்புக் கோரி, போலீஸில் புகார் கொடுக்க வேண்டாம், தனது மனைவி, பிள்ளைகள் பாதிக்கப்பட விரும்பவில்லை என கெஞ்சியுள்ளார்.
ஆனால், ஏர் இந்தியா நிறுவனம், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் டெல்லி போலீஸார் கடந்த புதன்கிழமை அந்த தொழிலதிபர் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி அமெரிக்காவில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் நடந்துள்ளது. ஆனால், ஏர் இந்தியா நிறுவனமோ 2023, ஜனவரி 4ம் தேதிதான் டெல்லி போலீஸில் புகார் அளித்துள்ளது.
விமானத்தில் மூதாட்டி முன் ஜிப்பை கழற்றி அசிங்கம் செய்த போதை ஆசாமி
undefined
இந்த சம்பவம் குறித்து டெல்லி போலீஸாரின் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு கடந்த நவம்பர் 26ம் தேதி ஏர் இந்தியா விமானம் வந்தது. இதில் பிஸ்னஸ் கிளாஸில் 102 பயணிகள் இருந்தனர். விமானத்தில் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு, விமானம் பறந்து கொண்டிருந்தது.
அப்போது, பிஸ்னஸ் கிளாசில் 8ஏ பிரிவில் அமர்ந்திருந்த ஆண் பயணி ஒருவர் குடிபோதையில், சிறிதுதூரம் நடந்து வந்து, வேறுஒரு இருக்கையில் அமர்ந்திருந்த வயதான பெண் பயணி மீது சிறுநீர் கழித்துள்ளார்.
உடனடியாக அந்த பெண் நடந்தவற்றை விமான ஊழியர்களிடம் தெரிவிக்க எழுந்தார்.அப்போது, அவரின் உடைகள், ஷூ, கைப்பை அனைத்திலும் சிறுநீர் நிரம்பியிருந்தன. அந்த கைப்பையில் வயதான பெண்ணின் பாஸ்போர்ட், பயண ஆவணங்கள், கரன்சி ஆகியவை இருந்தன. சிறுநீர் பட்ட அந்த பொருட்கள் அனைத்தையும் விமான ஊழியர்கள் தொட மறுத்துவிட்டனர். உடனடியாக விமானத்தின் கழிவறைக்குச் சென்று சுத்தம் செய்து, விமான ஊழியர்கள் அளித்த பைஜாமா உடையை அந்த பெண் மாற்றிக்கொண்டார்.
மத்திய அமைச்சர் அமித் ஷா பயணித்த விமானம் அவசரமாக கவுகாத்தியில் தரையிறக்கம்: என்ன காரணம்?
பாதிக்கப்பட்ட அந்த பெண் வேறு இருக்கை கேட்டபோது, இருக்கைகாலியாக இல்லை என்று விமான ஊழியர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவங்களைப் பார்த்துக்கொண்டிருந்த மற்றொரு பயணி, எனக்கு ஆதரவு அளித்து, முதல்வகுப்பில் ஒரு இருக்கை காலியாக இருக்கிறது எனக் கூறினார்.
ஏறக்குறைய 20 நிமிடங்கள் நின்று கொண்டே பயணித்தபின், விமானஊழியர்கள் அமரும் இருக்கை அளிக்கப்பட்டது. அதில் 2 மணிநேரம் பயணித்தார்.பின்னர் என்னுடைய இருக்கைக்கு வந்து அமருமாறு விமானஊழியர்கள் கேட்டுக்கொண்டபின்பும் மறுத்த அந்த பெண், கடைசிவரை விமான ஊழியர்கள் இருக்கையில் பயணித்தார்.
சிறிது நேரத்துக்குப்பின் சிறுநீர் கழித்த அந்த ஆண்பயணியிடம் விமானஊழியர்கள் சென்று பாதிக்கப்பட்ட பெண் பயணியிடம் மன்னிப்புக் கோரக் கோரினார்கள். ஆனால் அந்த பெண் பயணி, அந்தநபரை பார்க்கவோ, பேசவோ விருப்பம் இல்லை என்றும் விமானம் தரையிறங்கியதும் அவர் மீது புகார் அளித்து கைது செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்
ஆனால், எனது விருப்பதுக்கு மாறாக அந்த ஆண் பயணியை என் முன் நிறுத்தி மன்னிப்புக் கேட்க விமானநிறுவன ஊழியர்கள் வற்புறுத்தினர். என்னைப் பார்த்ததும் அந்த நபர் கண்ணீர்விட்டு அழுது, போலீஸில் புகார் அளிக்காதீர்கள், நான் ஒரு குடும்பஸ்தன், இந்த சம்பவத்தால் என் மனைவி, குழந்தைகள் பாதிக்கப்படவிரும்பவில்லை என்று தெரிவித்தார்.
இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் கிளை தொடங்க யுஜிசி அனுமதி தேவை
ஏற்கெனவே நான் மிகுந்த வேதனையில் இருந்தேன், இருப்பினும் அந்த சூழலில் அந்த நபருடன் பேச்சு வார்த்தை நடத்த விமானஊழியர்கள் என்னை வற்புறுத்தினார்கள்” எனத் தெரிவித்தார்
இது தொடர்பாக நவம்பர் 27ம் தேதி ஏர் இந்தியா சிஇஓவுக்கு அந்த வயதான பெண் பயணி புகார் எழுதியுள்ளார். ஆனால் ஜனவரி 4ம் தேதிதான் ஏர் இந்தியா சார்பில் புகார் அளிக்கப்பட்டது. பெண் பயணி மீது சிறுநீர் கழித்த அந்த நபர் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சங்கர் மிஸ்ரா என்பவராவார்.
பாதிக்கப்பட்ட பெண் புகாரையடுத்து, டெல்லி போலீஸார் சங்கர் மிஸ்ரா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவருக்கு எதிராக, ஐபிசி 294, 509, 510 ஆகிய பிரிவுகளில் முதல்த கவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சங்கர் மிஸ்ராவுக்கு 30 நாட்கள் விமானத்தில் பறக்க ஏர் இந்தியா நிறுவனம் தடை விதித்துள்ளது. மேலும், விமானஊழியர்கள் நடந்து கொண்டது குறித்தும் உள்விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.