US H1B Visa Fees: H1-B விசா கட்டணத்தை 332 சதவீதம்வரை உயர்த்துகிறது அமெரிக்கா! எவ்வளவு உயர வாய்ப்பு?

By Pothy Raj  |  First Published Jan 6, 2023, 11:54 AM IST

ஹெச்-1பி(H1-B visa) விசா உள்ளிட்ட பல்வேறு குடியேற்றக் கட்டணத்தை அமெரிக்க அரசு கடுமையாக உயர்த்த இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஹெச்-1பி(H1-B visa) விசா உள்ளிட்ட பல்வேறு குடியேற்றக் கட்டணத்தை அமெரிக்க அரசு கடுமையாக உயர்த்த இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹெச்-1பி விசாவில் பெரும்பாலும் தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களைச்சேர்ந்த பொறியாளர்கள், இந்தியாவில் இருந்துதான் அமெரிக்கா செல்கிறார்கள்.

Tap to resize

Latest Videos

எவ்வளவு கட்டணம் உயரலாம்

அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பின்படி, ஹெச்-1 விசாவுக்கான கட்டண் 460 டாலரில் இருந்து 780 டாலர் வரை அதிகரிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.38 ஆயிரம் முதல் ரூ.65 ஆயிரம்வரை உயரும் எனத் தெரிகிறது. 

ஹெச்-1 விசா என்பது அமெரிக்கர்கள் அல்லாத வெளிநாடுகளைச் சேர்ந்த ஊழியர்களை அமெரிக்க நிறுவனங்கள் பணிக்கு அமர்த்துவதாகும். ஆண்டுதோறும் சிலிகான் வேலிக்கு, சீனா, இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான இந்தியர்கள் ஹெச்-1 பி விசாவில் செல்கிறார்கள்.

இதில் ஹெச்2-பி விசாவுக்கான கட்டணம்  460 டாலரில் இருந்து 1,080 டாலராக அதிகரிக்கலாம். இந்திய மதிப்பில் ரூ.38ஆயிரம் முதல் ரூ.90ஆயிரம் வரை உயரலாம். ஹெச்2-பி விசா என்பது, சீசனல் தொழிலாளர்கள், வேளாண்மை சாராத தொழிலாளர்களைக் குறிக்கும். 

சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ் சாலை எப்போது முடியும், பயன்பாட்டுக்கு வரும்? நிதின் கட்கரி பதில்

எல்-1 விசா கட்டணம் 460 டாலரிலிருந்து 1385 டாலர் வரை உயரலாம். அதாவது இந்திய மதிப்பில் ரூ.38ஆயிரத்தில் இருந்து ரூ.1.14 லட்சம் வரை அதிகரிக்கலாம். எல்-1 விசா என்பது அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட நிறுவனத்தால் அமெரிக்காவுக்கு வெளியே பணியில் அமர்த்தப்பட்ட ஒருவருக்கு வழங்கப்படுவது எல்-1 விசாவாகும். இந்த எல்-1 விசா கட்டணம் 332 சதவீதம்  உயர்ந்துள்ளது. 

ஓ-1 விசா கட்டணமும் 460 டாலரில் இருந்து 1,055 டாலராக அதாவது 229 சதவீதம் உயரக்கூடும். இந்திய மதிப்பில் ரூ.38ஆயிரத்தில் இருந்து ரூ.88 ஆயிரமாக அதிகரிக்கலாம். ஓ-1 விசா என்பது அசாதாரண சாதனைகள் செய்த,  அசாதாரண திறன் கொண்ட நபர்களுக்கு வழங்கப்படுகிறது.

எப்போது கட்டணம் நடைமுறைக்குவரும்

ஹெச்-1பி விசா உள்ளிட்ட பல்வேறு விசாக்களுக்கான உயர்த்தப்பட்ட கட்டணம் குறித்து மக்களின் கருத்துக்கேட்புக்காக 60 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தஅவகாசம் கடந்த 4ம் தேதி தொடங்கியுள்ளது. கருத்துக்களைப் பொருத்து மாற்றங்கள் மார்ச் 7ம் தேதிக்குப்பின் நடைமுறைக்கு வரும். 
எதற்காக கட்டண உயர்வு

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரைக்கு ராமர் கோயில் அறக்கட்டளை பொதுச்செயலாளர் ஆதரவு

அமெரிக்க உள்துறையின் அறிவிப்பின்படி, அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்றச் சேவைக்கு பெரும்பாலும் நிதி என்பது விசா கட்டணம், விசா விண்ணப்பத்தின் மூலமே திரட்டப்படுகிறது. 96 சதவீத நிதியை விசா விண்ணப்பித்தின் மூலம்தான் பெறுகிறது, நாடாளுமன்ற ஒதுக்கீட்டில்இல்லை என்பதால் அவ்வப்போது கட்டணத்தை உயர்த்துகிறது. கடந்த 2016ம் ஆண்டுக்குப்பின் விசா கட்டணத்தில்எந்த மாற்றத்தையும் செய்யாமல் இருந்தநிலையில் 6 ஆண்டுகளுக்குப்பின் கட்டணம் உயர்த்தப்படுகிறது

click me!