TRF: டிஆர்எப்(TRF) அமைப்பை தடை செய்தது மத்திய அரசு: முகமது அமீன் தீவிரவாதியாக அறிவிப்பு

By Pothy RajFirst Published Jan 6, 2023, 9:28 AM IST
Highlights

பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்போடு தொடர்புடைய தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்(TRF) அமைப்பை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று தடை செய்து உத்தரவிட்டது

பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்போடு தொடர்புடைய தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்(TRF) அமைப்பை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று தடை செய்து உத்தரவிட்டது

மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட் அமைப்பு ஆன்லைன் வழியாக இளைஞர்களை ஈர்த்து அவர்களை தீவிரவாதச்செயல்களில் ஈடுபடுத்துகிறது, தீவிரவாத அமைப்புகளில் சேர்த்துவிடுகிறது. அது மட்டுமல்லாமல் தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவதுணை புரிதல், பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள், போதைப்பொருட்களை ஜம்முகாஷ்மீருக்கு கொண்டுவருவதையும் இந்த அமைப்பு செய்து வருகிறது

கடந்த 10 நாட்களில் இந்தியா வந்த வெளிநாட்டுப் பயணிகள் உடலில் 11 வகையான ஒமைக்ரான் வைரஸ் கண்டுபிடிப்பு

இந்தியாவில் மும்பை தீவிரவாதத் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தாக்குதலுக்கு காரணமான லஷ்கர் இ தொய்பா அமைப்பைத் தடை செய்தபின் 2019ம் ஆண்டுதான் இந்த தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட் எழுச்சி பெற்றது.
சமூக வலைத்தளங்களில் தீவிரமாகச் செயல்படும் தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட் அமைப்பு, இந்திய அரசுக்கு எதிராகவும், ஜம்மு காஷ்மீரை மக்களைத் தூண்டிவிடவும் சமூக வலைத்தளங்களில் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வந்தது. 

இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் கிளை தொடங்க யுஜிசி அனுமதி தேவை

தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட் அமைப்பின் தலைவர் ஷேக் சஜாத் குல், 1967 சட்டவிரோதச் செயல்கள் தடைச் சட்டத்தின் கீழ் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.  இந்த அமைப்பின் செயல்கள் தேசியப் பாதுகாப்புக்கும், இந்திய இறையாண்மைக்கும் எதிராக உள்ளன. தி ரெசிசிஸ்டன்ஸ் பிரன்ட் அமைப்பின் உறுப்பினர்கள், நிர்வாகிகள் மீது ஏராளமான வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட் அமைப்பை தடை செய்யப்பட்டஅமைப்பாக அறிவிக்கிறோம்.

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த,தற்போது பாகிஸ்தானில் வசித்துவரும்  முகமது அமின் என்ற அபு குபைப் என்பவரை தனித்தீவிரவாதியாக மத்திய அரசு அறிவிக்கிறது. லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்போடு சேர்ந்து கொண்டு  இந்தியாவுக்கு எதிராகவும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் தீவிரவாத செயல்களை தூண்டிவிடுதல், செயல்படுதலில் ஈடுபட்டுள்ளதையதையடுத்து, தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தீவிரவாதசெயல்களை ஒருங்கிணைத்தல், சதித்திட்டம் திட்டுதல், ஆயுதங்கள், வெடிபொருட்களை தீவிரவாதிகளுக்கு சப்ளை செய்தல், தீவிரவாதிகளுக்கு தேவைாயன நிதியுதவி அளிதல், எல்லைதாண்டி ஜம்மு காஷ்மீருக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ துணை செய்தலை முகமது அமின் செய்து வருகிறார்.
இதையடுத்து, சட்டவிரோதச்செயல்கள் தடுப்புச்சட்டத்தின் கீழ் முகமது அமின் தனித்தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 

click me!