மே மாத நீட் தேர்வுக்கான விண்ணப்பம் ஜனவரியில் தொடக்கம்?

By Velmurugan sFirst Published Jan 6, 2023, 12:16 PM IST
Highlights

வருகின்ற மே மாதம் 7ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கான விண்ணப்பதிவை தேசிய தேர்வு முகமை இந்த மாதமே தொடங்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாடு முழுவதும் உள்ள மருத்துவம், பல் மருத்துவம், சித்தா, ஆயுர்வேதா, யுனானி போன்ற மருத்துவ படிப்புகளுக்கு நீட் என்ற ஒரே தேர்வை அடிப்படையாகக் கொண்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இதற்கு முன்னர் ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நுழைவுத்தேர்வுகளை மேற்கொண்டன. ஆனால் தற்போது தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் நீட் தேர்வு மூலம் மட்மே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

இரைப்பை புற்றுநோயை முன்கூட்டியே கண்டுபிடிக்கும் கருவி; பெரியார் பல்கலை. சாதனை

இந்த ஆண்டு வருகின்ற மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் தேர்வுக்கு விண்ணப்பிப்பது குறித்த முறையான தகவல்கள் இல்லை. இந்நிலையில், நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களை மாணவர்கள் இந்த மாதமே பதிவேற்றம் செய்யலாம் என்ற அறிவிப்பு தேசிய தேர்வு முகமையால் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது.

புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு ஒத்திவைப்பு; ஆத்திரத்தில் காளையை அவிழ்த்த உரிமையாளர்

விண்ணப்ப தேதி வெளியிடப்பட்டவுடன் தேர்வுகள் www.nta.ac.in மற்றும் www.neet.nta.nic.in என்ற இணையதள பக்கங்களில் சென்று விண்ணப்பங்களை பதிவேற்றும் செய்யலாம். 

click me!