அருணாச்சலப்பிரதேச எல்லையை சீன உரிமை கொண்டாடுவது அட்டூழியம்: இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் அதிர்ச்சி

By Pothy Raj  |  First Published Aug 31, 2022, 1:48 PM IST

அருணாச்சலப்பிரதேசத்தின் எல்லைப் பகுதியை சீனா தங்களுடையது என்று உரிமை கொண்டாடுவது அட்டூழியம்.எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் அத்துமீறுவது சர்வதேச உத்தரவை மீறுவதாகும் என்று இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் தெரிவித்துள்ளார்.


அருணாச்சலப்பிரதேசத்தின் எல்லைப் பகுதியை சீனா தங்களுடையது என்று உரிமை கொண்டாடுவது அட்டூழியம்.எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் அத்துமீறுவது சர்வதேச உத்தரவை மீறுவதாகும் என்று இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான ஜெர்மனி தூதராக பிலிப் ஆக்கர்மான் நியமிக்கப்பட்டுளார். அவர் முதல்முறையாக ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

Latest Videos

undefined

adani: கெளதம் அதானியின் சொத்து மதிப்பு 2.5 ஆண்டுகளில் 13 மடங்கு அதிகரிப்பு: வளர்ச்சி என்ன தெரியுமா?

இந்தியாவின் வடபகுதி எல்லையில் என்ன பிரச்சினை, சிக்கல் இருக்கிறது என்பது எங்கள் நாடு நன்கு அறியும். அருணாச்சலப்பிரதேச எல்லையில் ஒருபகுதியில் சீனா தங்களின் பகுதி என உரிமை கொண்டாடுகிறது. இது அட்டூழியாமானது. எல்லையில் அத்துமீறி  ஊடுருவுவதும் கடினமானது, இதை ஏற்றுக்கொள்ளக் கூடாது.

எல்லையில் இமயமலையின் இரு குன்றுகள் செல்கின்றன. இந்தப் பகுதியிலும், கிழக்கு லடாக் பகுதியிலும் கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு இடங்களிலும் மோதல் நடந்து வருகிறது. நாம் ரஷ்யா-உக்ரைன் இடையே இருக்கும் பிரச்சினையையும், இந்தியா –சீனா எல்லைப் பிரச்சினையயும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்.

elon musk: twitter: tesla: டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்துக்கு 2வது நோட்டீஸ்

உக்ரைன் எல்லையில் என்ன நடக்கிறது என்பதை, இந்தியா-சீனா எல்லையில் நடக்கும் விஷயத்தோடு ஒப்பிட முடியாது. இந்தியாவின் எல்லைப் பகுதியில் 20% பகுதிகள் சீனாவுக்கு சொந்தமானது அல்ல, சீனா வைத்திருக்கவும் இல்லை. இந்திய அந்த பகுதியில் உள்ள ஒவ்வொரு கிராமத்தையும், ஒவ்வொரு நகரத்தையும் திட்டமிட்டு அழிக்கவில்லை.

இது இந்தியாவின் பிரச்சினை. உங்களுக்கான வடபகுதி எல்லை இருக்கிறது. ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் இதுபோன்ற சிக்கல்களைச் சந்தித்து வருகிறீர்கள். எனவே, இந்திய தரப்புடன் பேசும்போது, சர்வதேச ஒழுங்கை நிலைநிறுத்தவும், பாதுகாக்கவும் வேண்டும் என்ற புரிதல் ஏற்பட்டுள்ளதாக நான் நினைக்கிறேன்.

உக்ரைன் விவகாரத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு விஷயத்திலும் நாங்கள் உடன்படாமல் போகலாம், உக்ரைன் பிரச்சனை உலகில் பன்மடங்கு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச ஒழுங்கை மீறுபடுவது குறித்து இந்திய தரப்பு நன்றாகவே புரிந்து வைத்துள்ளது.

இவ்வாறு ஆக்கர்மான் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி IPO வரும் செப் 5ல் வெளியீடு: பங்கு விலையை தெரிஞ்சுங்கோங்க!

கடந்த வாரம் நடந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் உக்ரைன்-ரஷ்யா விவகாரத்தில் முதல்முறையாக ரஷ்யாவுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததில் இருந்து ரஷ்யாவுக்கு ஆதரவாகவே நிலைப்பாடு எடுத்துவந்தது இந்தியா. ஆனால், முதல்முறையாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ரஷ்யாவுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது.

click me!