ncrb: இந்தியாவில் தினசரி 89 பெண்கள் பலாத்காரம்; ஒருமணிநேரத்துக்கு 49 குற்றம்: என்சிஆர்பி தகவல்

By Pothy Raj  |  First Published Aug 31, 2022, 12:06 PM IST

இந்தியாவில் தினசரி 89 பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்படுகிறார்கள், ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை பெண்களுக்கு எதிராக 49 குற்றங்கள் நடக்கின்றன  என்று தேசிய குற்றஆவணக் காப்பகம்(என்சிஆர்பி) தெரிவித்துள்ளது.


இந்தியாவில் தினசரி 89 பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்படுகிறார்கள், ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை பெண்களுக்கு எதிராக 49 குற்றங்கள் நடக்கின்றன  என்று தேசிய குற்றஆவணக் காப்பகம்(என்சிஆர்பி) தெரிவித்துள்ளது.

என்சிஆர்பி அமைப்பு என்பது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அமைப்பாகும். 

Tap to resize

Latest Videos

Savarkar: பறவையின் இறகில் அமர்ந்து பறந்த வீரசாவர்க்கர்: கர்நாடக பாடபுத்தகத்தில் தகவலால் மாணவர்கள் குழப்பம்

 

கடந்த 2021ம் ஆண்டில் மட்டும் 31 ஆயிரத்து 677 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று என்சிஆர்பி தெரிவித்துள்ளது. 2020ம் ஆண்டில் 28,046ஆகவும், 2019ம் ஆண்டில் 32,033 ஆகவும் பாலியல் பலாத்காரங்கள் இருந்தன. 

இந்திய கடற்படைக்கு புதிய கொடி… வெளியிடுகிறார் பிரதமர் மோடி… மீண்டும் அகற்றப்படும் செயின்ட் ஜார்ஜ் கிராஸ்!!

ராஜஸ்தானில் அதிகபட்சமாக கடந்த ஆண்டு 6,337பாலியல் பலாத்காரங்கள் நடந்துள்ளன. அதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்தில் 2,947, மகாராஷ்டிராவில் 2,496, உத்தரப்பிரதேசத்தில் 2,845 பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டனர். டெல்லியில் 1,250 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகின.

குற்றவிகிதம் என்று எடுத்துக்கொண்டால் ஒரு லட்சம் பேருக்கு அதிகபட்சம் 16.4 சதவீதம் ராஜஸ்தானில் நடக்கிறது. அதைத்தொடர்ந்து சண்டிகரில் 13.3%, டெல்லியில் 12.9%, ஹரியாணாவில் 12.3%, அருணாச்சலப்பிரதேசம் 11.1 சதவீதம் குற்றம் பதிவாகியுள்ளது. இந்தியஅளவில் சராசரி என்பது 4.80% ஆகும்.

2021ம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக 4 லட்சத்து 28ஆயிரத்து 278 வழக்குகள் பதிவாகியுள்ளன. குற்றவிகிதம் ஒரு லட்சம் பேருக்கு 64.50% என்றஇருக்கிறது. குற்றவழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வீதம் 77.10% என்ற அளவில் இருக்கிறது

உடலுறவுக்கு முன்பு ஆதார் அட்டையை சரிபார்க்க வேண்டுமா ? நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி !

2020ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றம் 3,71,503 ஆகவும், 2019ம் ஆண்டில் 4,05,326ஆகவும் இருந்தது. பெண்களுக்கு எதிரான குற்றம் என்றால் பாலியல் பலாத்காரம், பலாத்காரம் செய்து கொலை, வரதட்சணை, ஆசிட் வீச்சு, தற்கொலைக்கு தூண்டுதல், கடத்தல், கட்டாயத் திருமணம், ஆட்கடத்தல், ஆன்லைன் தொந்தரவு உள்ளிட்டவை அடங்கும்.

2021ம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக குற்றவழக்குகள் அதிகபட்சமாக உ.பியில் பதிவாகியுள்ளன. உ.பியில் 56,083 வழக்குகளும், ராஜஸ்தானில் 40,738 வழக்குகளும், மகாராஷ்டிராவில் 39,526, மேற்கு வங்கத்தில் 35,884, ஒடிசாவில் 31,352 வழக்குகளும் பதிவாகியுள்ளன. குற்றவழக்கு வீதத்தின் அடிப்படையில் அசாம் மாநிலம் 168.3% என்ற அளவில் முதலிடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து டெல்லி 147%, ஒடிசா 137%,  ஹரியாணா 119%, தெலங்கானா 111% பதிவாகியுள்ளது.

இவ்வாறு என்சிஆர்பி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!