Savarkar: பறவையின் இறகில் அமர்ந்து பறந்த வீரசாவர்க்கர்: கர்நாடக பாடபுத்தகத்தில் தகவலால் மாணவர்கள் குழப்பம்

Published : Aug 31, 2022, 10:49 AM IST
Savarkar: பறவையின் இறகில் அமர்ந்து பறந்த வீரசாவர்க்கர்: கர்நாடக பாடபுத்தகத்தில் தகவலால் மாணவர்கள் குழப்பம்

சுருக்கம்

அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, புல்புல் பறவையின் இறகில் அமர்ந்து தினசரி தாய்நாட்டுக்கு சென்றுவருவார் வீர சாவர்க்கர் என்று கர்நாடக பாடப் புத்தகத்தில் சர்ச்சைக்குரிய வகையில் குறிப்பிடப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையையும் மாணவர்கள் மத்தியில் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, புல்புல் பறவையின் இறகில் அமர்ந்து தினசரி தாய்நாட்டுக்கு சென்றுவருவார் வீர சாவர்க்கர் என்று கர்நாடக பாடப் புத்தகத்தில் சர்ச்சைக்குரிய வகையில் குறிப்பிடப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையையும் மாணவர்கள் மத்தியில் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த 15ம் தேதி,ஷிவமோகா நகரில் வீரசாவர்க்கர், திப்புசுல்தான் பேனர் வைப்பதில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சாவர்க்கரை வைத்து ஏற்பட்ட சர்ச்சை அடங்கி சில வாரங்களுக்குள் மீண்டும் அடுத்த சர்ச்சை எழுந்துள்ளது.

ஷாக்!! ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு.. டிக்கெட் முன்பதிவு குறித்து வெளியான தகவல்..

இந்துத்துவா சிந்தனையாளர் வீரசாவர்க்கரை சுதந்திரப் போராட்ட வீரராக பாஜக தொடர்ந்து சித்தரித்து வருகிறது. ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.  அது தொடர்பாக பல்வேறு கருத்துக்களையும், ஆவணங்களையும் தொடர்ந்து வெளியிடும்போது சில சந்தர்ப்பங்களில் சிக்கள்களிலும் சிக்கிக் கொள்கிறது.

குறிப்பாக, கர்நாடக மாநிலத்தில் 8ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் வீரசாவர்க்கர் பற்றி மிகைப்படுத்தி எழுதப்பட்டிருப்பது பாஜகவினரையே நெளியவைத்துள்ளது, மாணவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்திய கடற்படைக்கு புதிய கொடி… வெளியிடுகிறார் பிரதமர் மோடி… மீண்டும் அகற்றப்படும் செயின்ட் ஜார்ஜ் கிராஸ்!!

அந்தப் பாடப்புத்தகத்தில் “ வீரசாவர்க்கர் சுதந்திரப்போராட்டத்தின்போது, அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் அடைக்கப்பட்டிருந்த சிறையில் சாவித்துவாரம் கூட இல்லை. இருப்பினும் தினசரி புல்புல் பறவை அங்கு வரும், அந்த பறவையின் இறகில் அமர்ந்து தினமும் வீரசாவர்க்கர் தனது தாய்நாட்டுக்குச் சென்றுவருவார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து கர்நாடக பாடபுத்தகத்தை தயாரித்த குழுவினரிடம் நிருபர்கள் கேட்டபோது, “ இந்த கவித்துவமான வரிகளைப் யாரும் புரிந்து கொள்ளவில்லை. பறவை இறக்கை மீது அமர்ந்து வீரசாவர்க்கார் பறந்தார் என்று நேரடியாக அர்த்தம் கொள்ளக்கூடாது. அதை கவிநயத்துடன், இயற்கையை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்” என்று மழுப்பலாகத் தெரிவித்தனர்.

கணக்கு போட தெரியாமல் முளித்த தலைமை ஆசிரியர்… அதிரடி நடவடிக்கை எடுத்த ஆட்சியர்… வைரலாகும் வீடியோ!!

பாஜக தேசியப் பொதுச்செயலாளரும் தமிழகத்துக்கான மேலிடப் பொறுப்பாளரும் சிடி ரவி கூறுகையில் “ வீர சாவர்க்கர் தனது தாய்நாட்டின் மீது கொண்டிருந்த பற்றை வெளிப்படுத்த, ஆசிரியர் இதுபோன்ற உவமையைக் கையாண்டுள்ளார். இந்தபாடப் புத்தகத்தில் யதார்த்தத்தை பார்க்க வேண்டாம். கற்பனைத் திறனுடன் பார்த்தால் நீங்கள் உலகிற்கு எந்த இடத்துக்கும் சென்றுவரலாம்” எனத் தெரிவித்தார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கோவா கிளப் தீ விபத்தில் முக்கிய நபர் கைது.. யார் காரணம்? ரகசியத்தை உடைத்த முதல்வர்
நாங்க இருக்கோம்.. விமான பயணிகளுக்கு கைகொடுத்த ஏர் இந்தியா.. இனி நோ கவலை!