ரயிலில் இனி வாட்ஸ்அப் மூலம் உணவு ஆர்டர்.. ஐஆர்சிடிசி கொடுத்த சூப்பர் அப்டேட் .!!

Published : Aug 30, 2022, 10:20 PM IST
ரயிலில் இனி வாட்ஸ்அப் மூலம் உணவு ஆர்டர்.. ஐஆர்சிடிசி கொடுத்த சூப்பர் அப்டேட் .!!

சுருக்கம்

இனி வாட்ஸ்அப் மூலம் உணவு ஆர்டரை செய்யலாம் என்று ஐஆர்சிடிசி அசத்தலான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

இந்தியன் ரயில்வே மூலம் இயக்கப்படும் ரயில் பயணிகளுக்கு தேவையான உணவுகளை  பொதுத் துறை நிறுவனமான இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி)  வழங்கி வருகிறது.  இந்த நிறுவனம் தற்போது, பயணிகளுக்கு வாட்ஸ்அப் மூலம் உணவு விநியோக சேவையை தொடங்கியுள்ளது. ஆர்டர் செய்யும் போது பயணிகள் தங்கள் பிஎன்ஆர் எண்ணைப் பயன்படுத்தி, ரயில் இருக்கையில் இருந்தே உணவை ஆர்டர் செய்யலாம் என தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..கள்ளகுறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் கொலையா ? தற்கொலையா ? நீதிமன்றம் பரபரப்பு தகவல்.!!

இதனை ஐஆர்சிடிசி மற்றும் ஜியோ Haptik-ம் இணைந்து செயல்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் சேட்டில் இருந்தபடியே பயணிகள் ‘Zoop’ என தெரிவிக்கப்பட்டுள்ள இந்த செயலியில் உணவு ஆர்டர் செய்யலாம் என்றும், பயணிகள் வேறு எந்தவொரு லிங்கிற்கும் ரீ-டைரக்ட் செய்து செல்ல வேண்டியதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இதற்கென ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்ய பிரத்யேகமாக செயலி ஏதும் இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை. 

இந்த வாட்ஸ்அப் சாட்பாட் மூலம் பிஎன்ஆர் எண்ணை கொண்டு ஆர்டர் செய்யும் பயணிகளின் இருக்கைக்கே உணவு டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்டர் செய்த உணவை ரியல் டைமில் டிரேக் செய்யும் வசதியும் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், பயணிகள் +91 7042062070 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் சாட் செய்து உணவை ஆர்டர் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளுக்கு..ஸ்டாலின் எடுத்த 3 அஸ்திரம்.. ஜெயலலிதா மரணத்தில் சிக்கும் முன்னாள் தலைகள் ? அதிர்ச்சியில் அதிமுக வட்டாரம்

ஆர்டர் உறுதி செய்யப்பட்டதும் உணவு இருக்கைக்கு கொண்டுவரப்படுமாம். இப்போதைக்கு இந்த சேவை குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் மட்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. விஜயவாடா, வதோதரா, மொராதாபாத், வாரங்கல், பி.டி. தீன்தயாள் உபாத்யாயா, கான்பூர், ஆக்ரா, துண்ட்லா சந்திப்பு, பல் ஹர்ஷா சந்திப்பு மற்றும் 100-க்கும் மேற்பட்ட A1, A மற்றும் B வகை ரயில் நிலையங்களில் இந்த சேவை கிடைக்கும் என்றும் அறிவித்து உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வெங்காயம் பூண்டால் தகராறு! விவாகரத்தில் முடிந்த திருமண வாழ்க்கை! நடந்தது என்ன?
நாளை பெங்களூரில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை! வெளியான லிஸ்ட்!