8 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா.. 7,231 பேருக்கு பாதிப்பு.. 45 பேர் பலி

Published : Aug 31, 2022, 12:41 PM IST
8 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா.. 7,231 பேருக்கு பாதிப்பு.. 45 பேர் பலி

சுருக்கம்

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 7,231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் புதிதாக 45 பேர் உயிரிழந்துள்ளனர்  

இதுக்குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 7,231 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,44,28,393 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் படிக்க:10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா.. 9,531 பேருக்கு பாதிப்பு.. புதிதாக 36 பேர் பலி

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து 24,509 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை  4,38,35,852 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்போர் எண்ணிக்கை 64,667 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 45 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும் படிக்க:சற்று குறைந்த கொரோனா.. இன்று ஒரே நாளில் 13,272 பேருக்கு பாதிப்பு.. புதிதாக 36 பேர் பலி..

நாட்டில் இதுவரை கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5,27,874 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கொரோனா உயிரிழப்பின் விகிதம்  1.19 % ஆக குறைந்துள்ளது. அதே போல் சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.15% ஆக குறைந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 98.66 % ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 212.39 கோடிக்கு அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 22,50,854 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அட்வான்டேஜ் எடுக்கும் ஸ்பைஸ்ஜெட்.. தினமும் 100 கூடுதல் விமானங்கள்.. திணறும் இண்டிகோ!
இந்தியர்களுக்கு நிம்மதி.. இண்டிகோவுக்கு செக்! புதிய விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு கிரீன் சிக்னல்