28 ரயில்களில் 583 பெர்த் அதிகரிப்பு! திடீர் மாற்றத்தால் முன்பதிவு செய்த பயணிகள் அவதி

By SG Balan  |  First Published Apr 15, 2023, 11:11 AM IST

3 டயர் ஏசி பெட்டிகளை எகானமி ஏசி பெட்டிகளாக மாற்றியதன் மூலம் 28 ரயில்களில் 500க்கும் மேற்பட்ட இருக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், முன்பதிவு செய்தவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


சென்னையிலிருந்து ஹவுரா அல்லது மங்களூருவுக்குப் பயணிக்கத் திட்டமிடும் ரயில் பயணிகளுக்கு டிக்கெட்டைப் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகமாகியுள்ளது. 28 ரயில்களில் 583 பெர்த்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்காக 3 டயர் ஏசி பெட்டிகள் புதிய எகானமி ஏசி பெட்டிகளாள மாற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒரு பெட்டியில் 72 பேருக்குப் பதிலாக 83 பேர் வரை பயணிக்க முடியும்.

முதல் கட்டமாக, அதிக தேவை உள்ள வழித்தடங்களில் தினசரி மற்றும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்கள் இந்த மாற்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. சென்னை - மங்களூரு, கன்னியாகுமரி - புனே, மதுரை - சென்னை (மூன்று வாரம்), புதுச்சேரி - ஹவுரா, சென்னை - நியூ ஜல்பைகுரி, சென்னை - புது தில்லி, சென்னை - சாப்ரா உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களில் இரண்டு முதல் ஏழு எகானமி ஏசி பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. 3 டயர் ஏசி பெட்டிகளை எகானமி பெட்டிகளாக மாற்றும் பணிகள் இம்மாதத் தொடக்கத்தில் ஆரம்பமாகின.

Tap to resize

Latest Videos

செளராஷ்டிரா தமிழ் சங்கமம் சிறப்பு ரயிலை தொடங்கி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி

ஏசி எகானமி வகுப்பின் கட்டணம் வழக்கமான வகுப்பை விட 6 முதல் 7% குறைவாக இருப்பதாகவும், இந்த நடவடிக்கை பயணிகளுக்கு ரயில் பயணத்தை மலிவாக மாற்றியுள்ளதாகவும் ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. "கோடை காலத்தில் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் குறைந்த கட்டணத்தில் பயணிக்க பயன்படுவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். ரயில் பயணிகளின் தேவை மற்றும் ஆதரவை கருத்தில் கொண்டு ஏசி பெட்டிகள் அதிகரிக்கப்படும்” என்று ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.

இதற்கிடையில், இந்த நடவடிக்கை ஏற்கெனவே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த சில பயணிகளை எரிச்சலடையச் செய்துள்ளது. அவர்களின் அனுமதியின்றி அவர்கள் டிக்கெட் பெற்றிருந்த வகுப்புகளின் தரத்தைக் குறைத்திருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதுமட்டுமின்றி ​​முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளின் பெர்த் மற்றும் கோச் எண் மாற்றப்பட்டுள்ளதால் அவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

புதிய உச்சம்! 50,000-ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 20 பேர் மரணம்

திருச்சியைச் சேர்ந்த பயணி எஸ். ராதாகிருஷ்ணன் கூறுகையில், “பெட்டியின் உட்புறம் நன்றாக இருக்கிறது, ஆனால் ரயில்வே ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்ட பெர்த்தின் வகுப்பைக் குறைத்து 3வது ஏசி வகுப்பை அறிமுகப்படுத்தியது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. கூடுதல் கட்டணம் செலுத்தியதற்கான பணத்தைத் திரும்பப் பெறமுடியும் என்று என்னிடம் உறுதி அளித்துள்ளனர். ஆனால், ரயில்வே இதைச் சிறப்பாகத் திட்டமிட்டு செய்திருக்கலாம்." என்றார்.

ரயில்வேயின் திருத்தப்பட்ட கொள்கையின்படி, ஒரு நீண்ட தூர ரயிலில் அதிகபட்சம் இரண்டு ஸ்லீப்பர் பெட்டிகள் இருக்கலாம், மீதமுள்ளவை ஏசி பெட்டிகளாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மீது பைப் குண்டு வீச்சு; நூலிழையில் உயிர் தப்பினார்!

click me!