
மகாராஷ்டிராவில் சாலையோர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 25 பேர் படுகாயமடைந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து புனே நோக்கி 40 பயணிகளுடன் பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. பேருந்து அதிகாலையில் ராய்காட்டில் பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 25 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.
இந்த விபத்து குறித்து அறிந்த காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உடனே படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.