புதிய உச்சம்! 50,000-ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 20 பேர் மரணம்

By SG Balan  |  First Published Apr 15, 2023, 9:09 AM IST

கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதிக்குப் பிறகு முதல் முறையாக நாட்டில் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 50,000 ஐத் தாண்டியது.


கடந்த 6 மாதங்களில் முதல் முறையாக, இந்தியாவில் ஒரே நாளில் கோவிட்-19 தொற்றினால் பலியானவர்கள் எண்ணிக்கை 20 ஐத் தொட்டது. 14 மாநிலங்களில் குறைந்தது ஒரு மரணம் பதிவாகியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருவதால், ஒரே நாளில் புதிதாக தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 11,109 ஆக உயர்ந்தது. முந்தைய நாள் இந்த எண்ணிக்கை 10,168 ஆக இருந்தது.

நாட்டில் கோவிட் இறப்புகள் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக எண்ணிக்கை சீராக அதிகரித்து வருகிறது. வியாழக்கிழமை மொத்த எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 6 மாதங்களுக்குப் பிறகு ஒரே நாளில் 20 பேருக்கு மேல் இறந்துள்ளனர். கடைசியாக 20 அல்லது அதற்கு மேற்பட்ட கோவிட் இறப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் 15 அன்று பதிவாகியுள்ளன.\

Tap to resize

Latest Videos

டெல்லி மற்றும் ராஜஸ்தானில் தலா மூன்று இறப்புகளும், பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கரில் தலா இரண்டு இறப்புகளும் பதிவாகியுள்ளன. ராஜஸ்தானில் வெள்ளிக்கிழமை மேலும் மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன, மகாராஷ்டிராவில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை, கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதிக்குப் பிறகு முதல் முறையாக நாட்டில் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 50,000 ஐத் தாண்டியது. தினசரி தொற்று பாதிப்பு வியாழக்கிழமை 5% ஐத் தாண்டியது. கடந்த 24 மணிநேரத்தில், நாட்டில் 2.21 லட்சம் கோவிட் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அவர்களில், 11,109 (5.01%) பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு வரை, ஏப்ரல் மாத முதல் இரண்டு வாரங்களுக்குள் கோவிட் நோயால் 153 இறப்புகள் பதிவாகியுள்ளன. மார்ச் மாதம் மட்டும் 89 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் இதுவரை நாட்டில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த இறப்புகள் 5,32,309 ஐத் தொட்டுள்ளது.

click me!