டெல்லியை கோட்டை விட்ட பாஜக; பஞ்சாபில் ஆபரேஷன் லோட்டஸ் முயற்சி; ஆம் ஆத்மி ஆட்சிக்கு ஆப்பு!!

By Dhanalakshmi GFirst Published Sep 14, 2022, 1:36 PM IST
Highlights

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியை கவிழ்ப்பதற்காக 10 எம்எல்ஏக்களை பாஜக அணுகி இருப்பதாக டெல்லி முதல்வரும், கட்சி நிறுவனருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியை கவிழப்பதற்காக பத்து எம்எல்ஏக்களுக்கு பாஜக விலை பேசி வருகிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் டெல்லியில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை ஆபரேஷன் லோட்டஸ் என்ற பெயரில் விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்க பாஜக முயல்கிறது என்று தெரிவித்து இருந்தார். தற்போது பஞ்சாப் பக்கம் தங்களது பார்வையை பாஜக திருப்பி இருப்பதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து பஞ்சாப் அமைச்சர் ஹர்பல் சீமா இன்று செய்தியாளர்களுக்கு அளித்திருந்த பேட்டியில், ''டெல்லியில் மூத்த பாஜக தலைவர்களை சந்திப்பதற்காக ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். பாஜகவுக்கு தாவினால், பல கோடி ரூபாய் தருவதாகவும் பேரம் பேசியுள்ளனர். கட்சி மாறுவதற்கு தற்போது ஒருவருக்கு ரூ. 25 கோடி விலை பேசி உள்ளனர். பாஜகவின் ஆபரேஷன் லோட்டஸ் கர்நாடகாவில் வேண்டுமானால் எடுபடலாம். ஆனால், டெல்லி எம்எல்ஏக்களிடம் எடுபடவில்லை. அவர்கள் தங்களது கொள்கையில் உறுதியாக இருந்தனர். பஞ்சாபில் ஆட்சியை கவிழ்க்க ஒத்துழைப்பவர்களுக்கு பதவி உயர்வு, புதிய பதவிகள் வழங்கப்படும் என்று ஆசை காட்டியுள்ளனர்'' என்று தெரிவித்தார். 

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் UPSC வேலை.. விண்ணப்பிக்க நாளை தான் கடைசி தேதி.. விவரங்கள் இதோ !!

நடப்பு மாதத்தின் துவக்கத்தில்தான் பாஜகவுக்கு கட்சி மாறும் டெல்லி ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுக்கு தலா ரூ. 20 கோடி கொடுப்பதாக பாஜக பேரம் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.  

பஞ்சாப் பாஜக மீதான குற்றச்சாட்டை அந்தக் கட்சி மறுத்துள்ளது. இதுகுறித்து பாஜகவின் மூத்த தலைவர் சுபாஷ் சர்மா கூறுகையில், ''பஞ்சாப்  மாநில ஆம் ஆத்மி கட்சியில் மிகப்பெரிய பிளவு ஏற்படப் போகிறது என்பதைத்தான் அமைச்சர் ஹர்பல் சீமாவின் பேட்டி காட்டுகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் தலையீட்டினால் கட்சியில் பிளவு ஏற்பட இருக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.

கோவாவில் இன்றுதான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எட்டு பேர் பாஜகவில் இணைந்துள்ளனர். அந்த செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டு இருக்கும்போது, இந்த தகவலும் பஞ்சாபில் இருந்து வெளியாகியுள்ளது.

கோவாவில் காங்கிரஸ் கட்சிக்கு வேட்டு வைக்கும் பாஜக; புதிய தகவலால் காங்கிரசில் பதற்றம்!!

click me!