covid second wave:கொரோனாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை உயிரிழப்பு குறித்து தணிக்கை: நாடாளுமன்றக் குழு அறிக்கை

By Pothy Raj  |  First Published Sep 14, 2022, 12:31 PM IST

நாட்டில் மிகவும் கோரத்தாண்டவமாடிய கொரோனா 2வது அலையில் மத்தியஅரசு மட்டும் சரியாகக் கணித்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும், தடுப்பு நடவடிக்கைகளையும் செய்திருந்தால், ஏராளமான மக்களின் உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் என்று மத்தியஅரசை நாடாளுமன்றக் குழு சாடியுள்ளது.


நாட்டில் மிகவும் கோரத்தாண்டவமாடிய கொரோனா 2வது அலையில் மத்தியஅரசு மட்டும் சரியாகக் கணித்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும், தடுப்பு நடவடிக்கைகளையும் செய்திருந்தால், ஏராளமான மக்களின் உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் என்று மத்தியஅரசை நாடாளுமன்றக் குழு சாடியுள்ளது.

அதுமட்டுமல்லாமல், ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறித்து தணிக்கையும் செய்ய வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்குப் பரிந்துரைசெய்துள்ளது.

Tap to resize

Latest Videos

சுகாதாரத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தனது 137வது அறிக்கையை மாநிலங்களவையில் கடந்த திங்கள்கிழமை தாக்கல்செய்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கோவாவில் காங்கிரஸ் கட்சிக்கு வேட்டு வைக்கும் பாஜக; புதிய தகவலால் காங்கிரசில் பதற்றம்!!

கொரோனா 2வது அலையில் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர், உயிரிழப்பு அதிகரித்தது, ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை நிலவியது, மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு பற்றாக்குறை இருந்தது, மருந்துகளுக்கு பற்றாக்குறை இருந்தது  என்பதில் சந்தேகமில்லை.

குறிப்பாக முக்கியமான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது, அத்தியாவசிய மருத்துவ சுகாதாரச் சேவைகள் பாதிக்கப்பட்டன, ஆக்சிஜன் சிலிண்டர்கள் , மருந்துகள் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டன.

மத்திய அரசு வெற்றிகரமாக கொரோனா வைரஸ் பரவலை முன்கூட்டியே கண்டுபிடித்துவிட்டது. ஆனால், சரியான தடுப்பு நடவடிக்கைகளையும், கட்டுப்பாடு நடவடிக்கைளையும் எடுத்திருந்தால், கொரோனா 2வது அலையில் ஏராளமான உயிரிழப்புகள் நடந்ததை தவிர்த்திருக்கலாம். லட்சக்கணக்கான மக்களின் உயிரை காத்திருக்கலாம்.

புற்றுநோய் மருந்து, ஆன்டிபயாடிக்ஸ் விலை குறையும்! அத்தியாவசிய பட்டியலில் 34 மருந்துகள் சேர்ப்பு

கொரோனா முதல் அலைக்குப்பின் கொரோனா பரவல் குறையத் தொடங்கியது, ஆனால்அந்த நேரத்தில் மத்திய அரசு சுணக்கம் காட்டாமல்,  தொடர்ந்து கட்டுப்பாட்டு நடவடிக்கைளை அமல்படுத்தியிருக்க வேண்டும். 

மாநிலங்களுக்கு எச்சரிக்கை செய்து, கட்டுப்பாட்டு பகுதிகளை அறிவிக்கவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சுணக்கம் காட்ட வேண்டாம் என்று பலமுறை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு எச்சரிக்கை செய்தது.

ஆனால், கொரோனா 2வது அலையில் எழுந்த நிச்சயமற்ற சூழல்கள், மருத்துவ அவசரநிலை, மருந்துகள்,ஆக்சிஜன் பற்றாக்குறை ஆகியவற்றை மாநில அரசுகளால் சமாளிக்க முடியவில்லை என்பது எங்களுக்கு வேதனையாக இருக்கிறது. இதனால் 2வது அலையில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழக்க நேர்ந்தது.

கொரோனா 2வது அலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட  உயிரிழப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தணிக்கை செய்ய வேண்டும். அதற்கு மாநிலங்களுடன் இணைந்து செயல்பட்டு, கொரோனவில் உயிரிழந்தவர்களின் ஆவணங்களைச் சரிபார்க்கவேண்டும்.

பின்புறத்தில் செண்ட் பாட்டிலை சொருகிய நபர்… இயற்கை உபாதை கழிக்க முடியாமல் தவிப்பு… அடுத்து நடந்தது என்ன?

ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும்  உயிரிழக்கவில்லை என்ற மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் துரதிர்ஷ்டமாக மறுப்பது, எங்களுக்கு வேதனையாக இருக்கிறது

கொரோனா 2வது அலையில்  ஏராளமான குடும்பங்கள் சாலையில் ஆக்சிஜன் சிலிண்டருக்காக வரிசையில் காத்திருந்தார்கள் என்று ஊடகங்களில்செய்தி வெளியானது. பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தீர்ந்து போன சம்பவங்கள் நடந்தன, சில மணிநேரத்துக்கு மட்டும்தான் ஆக்சிஜன் இருப்பதாக செய்தி வெளியாகின. 

ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை, போதுமான அளவு இருப்புஇருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த 2020ம் ஆண்டு  அறிக்கை அளித்தது. ஆனால், அமைச்சகத்தின் நிழல்வாக்குறுதி, 2வது அலையில் வெளிப்பட்டுவிட்டது வேதனையாக இருக்கிறது.

ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு கடுமையான தேவை இருந்தபோது, அதைசீராக மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டிய பொறுப்பிலிருந்துமத்திய அ ரசு தவறிவிட்டது. இதுவரை இல்லாத சூழலை மக்கள் சந்தித்துவரும்போது, ஆக்சிஜன் சிலிண்டர்கள் தடையின்றி,சீராக கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை.

மருத்துவமனையில் படுக்கைவசதிகள் பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை, ஆக்சிஜன் உற்பத்தி ஆகியவற்றில் முறையான கண்காணிப்பு இல்லாததால், சூழல் மேலும் மோசமாகியது
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
 

click me!