piyush goyal:logistics policy: தேசிய சரக்குப்போக்குவரத்து கொள்கை: பிரதமர் மோடி வரும் 17ம் தேதி வெளியிடுகிறார்

By Pothy RajFirst Published Sep 14, 2022, 12:57 PM IST
Highlights

நாடுமுழுவதும் சரக்குகளின் தடையற்ற இயக்கத்தை உறுதிசெய்யும் நோக்கில்,  தேசிய சரக்குப் போக்குவரத்துக் கொள்கையை பிரதமர் மோடி வரும் 17ம் தேதி வெளியிடுகிறார் என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

நாடுமுழுவதும் சரக்குகளின் தடையற்ற இயக்கத்தை உறுதிசெய்யும் நோக்கில்,  தேசிய சரக்குப் போக்குவரத்துக் கொள்கையை பிரதமர் மோடி வரும் 17ம் தேதி வெளியிடுகிறார் என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

இந்த கொள்கையில் முக்கிய அம்சமாக டிஜிட்டல்மயமாக்கல், மறுபொறியிலாக்கம், பலபிரிவு போக்குவரத்து ஆகியவை குறித்து இருக்கும். கடந்த 2020ம் ஆண்டு பட்ஜெட்டின் போது, தேசிய அளவில் சரக்குப் போக்குவரத்து கொள்கை உருவாக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது. 

கொரோனாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை உயிரிழப்பு குறித்து தணிக்கை: நாடாளுமன்றக் குழு அறிக்கை

உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்கள் சர்வதேச சந்தைக்குச் செல்லும்போது அதிகமான போக்குவரத்து செலவு, போட்டித்தன்மை அதிகரிப்பு ஆகியவற்றை சமாளிக்கும் வகையில் இந்த கொள்கை உருவாக்கப்படுகிறது

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் UPSC வேலை.. விண்ணப்பிக்க நாளை தான் கடைசி தேதி.. விவரங்கள் இதோ !!

இது குறித்து மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், வர்த்தக வாரிய உறுப்பினர்கள் கூட்டத்தில் நேற்று பேசுகையில் “ வரும் 17ம் தேதி, தேசிய அளவில் சரக்குப் போக்குவரத்துக் கொள்கையை பிரதமர் மோடி வெளியிடுகிறார். நாட்டின் ஜிடிபியில் சரக்குப்போக்குவரத்துச் செலவு 13 முதல் 14 சதவீதம் இருக்கிறது. இதைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்த சரக்குப்போக்குவரத்துப் பிரிவு சிக்கலானது. ஏறக்குறைய 20க்கும் மேற்பட்ட அரசு நிறுவனங்கள், 40க்கும்மேற்பட்ட அரசுடன் கூட்டாக இணைந்துசெயல்படும் தனியார் நிறுவனங்கள், 37 ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில்கள், 500 சான்றிதழ்கள் பெற்ற நிறுவனங்கள், 1000க்கும் அதிகமான பொருட்கள் என இந்த சந்தையின் மதிப்பு 16000 கோடி டாலர் மதிப்புடையது

சர்வாதிகாரி மம்தா!மே.வங்கத்தை வடகொரியாவாக மாற்றுகிறார்: சுவேந்து அதிகாரி கொந்தளிப்பு

200 கப்பல் நிறுவனங்கள், 36 சரக்குப்போக்குவரத்து சேவை நிறுவனங்கள், 129 உள்நாட்டு கன்டெய்னர் டெப்போக்கள், 168 கன்டெய்னர் மையங்கள், 50 ஐடி எகோசிஸ்டம்கள், வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள் உள்ளன. இந்தத் துறையில் 2.20 கோடி மக்கள் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள். இந்திய சரக்குப்போக்குவரத்து சந்தையின் மதிப்பு மட்டும் 20 ஆயிரம் கோடி டாலராகும்” எனத் தெரிவித்தார்

click me!