அப்படிபோடு.. இனி தடுப்பூசி செலுத்த ஆதார் கட்டயாமில்லை.. மாஸ் காட்டும் மத்திய அரசு..!

Published : Feb 09, 2022, 06:41 AM IST
அப்படிபோடு.. இனி தடுப்பூசி செலுத்த ஆதார் கட்டயாமில்லை.. மாஸ் காட்டும் மத்திய அரசு..!

சுருக்கம்

கோவின் இணையதளத்தில் கொரோனா தடுப்பூசி பதிவுக்கு ஆதார் எண் அட்டை கட்டாயமல்ல, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட 9 அடையாள அட்டைகளை பயன்படுத்தலாம் என தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பொதுமக்களுக்கு இனி ஆதார் கட்டயமில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

கடந்த இரண்டு வருடமாக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் பொதுமக்களும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. 

இந்நிலையில்,  மத்திய அரசின் யு.ஐ.டி.ஏ.ஐ. அமைப்பு கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆதார் அட்டை கட்டாயமில்லை என அறிவித்தது. ஆதார் அட்டை இல்லாவிட்டாலும் அவருக்கான அத்தியாவசிய சேவைகள், பலன்கள் கிடைப்பதை மறுக்கக் கூடாது என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இருப்பினும் சில கொரோனா தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆதார் கட்டாயம் என்று கூறியதாக புகார்கள் வந்தன.

 இதையடுத்து ‘கோவின்’ இணையதளத்தில் கொரோனா தடுப்பூசி பதிவுக்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து, மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த வழக்கறிஞர் சித்தார்த் சங்கர் சர்மா உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கும், நடைமுறை செயல்களுக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதாகவும், தடுப்பூசி செலுத்த ஆதார் அட்டை கொண்டு வரச்சொல்லி அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாகவும் கூறியிருந்தார். 

இந்த வழக்கு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு  பதில் அளிக்க கடந்த அக்டோபர் 1-ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கோவின் இணையதளத்தில் கொரோனா தடுப்பூசி பதிவுக்கு ஆதார் எண் அட்டை கட்டாயமல்ல, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட 9 அடையாள அட்டைகளை பயன்படுத்தலாம் என தெரிவித்தார். இதையடுத்து தடுப்பூசி போட வரும் மக்களிடம் ஆதார் அட்டை கேட்டு வலியுறுத்த வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பொதுநல மனுவை தள்ளுபடி செய்தனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட Air India.. இலவச ரீ ஷெட்யூல், டிக்கெட் கேன்சல் செய்பவர்களுக்கு முழு பணம் ரிட்டன்
பீகார் முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ்குமார் திடீர் விலகல்.. பாஜக அழுத்தமா? பரபரப்பு தகவல்!