Nitin Gadkari: 15 ஆண்டுகள் பழமையான 9 லட்சம் வாகனங்களுக்குத் தடை - நிதின் கட்கரி அறிவிப்பு

By SG BalanFirst Published Jan 31, 2023, 9:44 AM IST
Highlights

அரசுப் பேருந்துகள் உள்பட 9 லட்சத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் பொதுப் பயன்பாட்டில் இருந்து விலக்கப்பட்டு, அவற்றுக்கு மாற்றாக புதிய வாகனங்கள் வாங்கப்படும் என்றும் அமைச்சர் கட்கரி தெரிவித்துள்ளார்.

வரும் ஏப்ரல் மாதம் முதல் 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வாகனங்கள் தடை செய்யப்பட உள்ளன என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

மத்திய அரசு 2070-ஆம் ஆண்டிற்குள் முழுமையாக கார்பன் வாயு வெளியேற்றம் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில், காற்று மாசுபாட்டை உண்டாக்கும் வாகனங்களின் பயன்பாட்டைத் தவிர்ப்பதற்காக கடந்த 2021ஆம் ஆண்டு பழமையான வாகன அழிப்புக் கொள்கையை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார்.

TN Postal GDS: தமிழக அஞ்சல் துறையில் 3167 வேலைவாய்ப்புகள்! கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம்!

அதன்படி, வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்கள் பயன்பாட்டில் இருந்து நீக்கப்படும் என்று மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்திருக்கிறார். இதனால், மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பழமையான வாகனங்கள் ஏப்ரல் மாதத்திலிருந்து பயன்படுத்தப்படாது.

அரசுப் பேருந்துகள் உள்பட 9 லட்சத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் பொதுப் பயன்பாட்டில் இருந்து விலக்கப்பட்டு, அவற்றுக்கு மாற்றாக புதிய வாகனங்கள் வாங்கப்படும் என்றும் அமைச்சர் கட்கரி தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத எத்தனால், மெத்தனால் மற்றும் மின்சாரம் மூலம் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

Rahul Gandhi:வன்முறையைத் தூண்டுபவர்களால் உயிரிழப்பின் வலியைப் புரிந்து கொள்ள முடியாது: ராகுல் காந்தி விளாசல்

click me!