TN Postal GDS: தமிழக அஞ்சல் துறையில் 3167 வேலைவாய்ப்புகள்! கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம்!

Published : Jan 30, 2023, 05:58 PM IST
TN Postal GDS: தமிழக அஞ்சல் துறையில் 3167 வேலைவாய்ப்புகள்! கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம்!

சுருக்கம்

அஞ்சல் துறையில் தமிழ்நாடு வட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான காலிப் பணியியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

அஞ்சல் துறையில் புதிய வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டத்தில் காலியாக இருக்கும் பணி இடங்களுக்கு ஆள் சேர்ப்பு நடைபெற உள்ளதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

காலிப் பணியிடங்கள்

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 3167 ஜிடிஎஸ் (GDS) காலிப் பணியிடங்கள் உள்ளன. ஜிடிஎஸ் பணி பிபிஎம் (BPM), ஏபிபிஎம் (ABPM) என இரண்டு பிரிவுகளைக் கொண்டது. அந்தப் பணிகளுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

யார் விண்ணப்பிக்கலாம்?

B.E, B.Tech, MBA போன்ற பட்டப் படிப்புகளை முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களாக இருக்கவேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.

சம்பளம் எவ்வளவு?

ஜிடிஎஸ் பணியில் வெவ்வேறு அளவுகளில் ஊதியம் வழங்கப்படுகிறது. ஏபிபிஎம் பிரிவில் குறைந்தபட்சமாக மாதம் ரூ.10,000 முதல் கொடுக்கப்படும். அதிகபட்சமாக ரூ.24,470/- வரை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. பிபிஎம் பிரிவில் குறைந்தபட்சம் ரூ.12,000 முதல் கிடைக்கும். அதிகபட்சமாக ரூ.29,380 ரூபாய் கிடைக்கும்.

கல்வித்தகுதி மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் வேலைக்குத் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கம்ப்யூட்டரை சுலபமாகப் பயன்படுத்தும் பழக்கமும், சைக்கிள் ஓட்டும் பழக்கமும் உள்ளவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும்.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்த வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி 16.02.2023 ஆகும். விருப்பமும் தகுதியும் உடையவர்கள் இந்தத் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க கட்டணம் ஏதும் கிடையாது.

அஞ்சல் துறையின் https://indiapostgdsonline.in/ref_validation.aspx என்ற இணையதளத்திற்குச் சென்று இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்தும் விண்ணப்பிக்கலாம்.

Apply Online for Tamil Nadu Postal Circle Gamin Dak Sevak (GDS) Recruitment

இந்த வேலைவாய்ப்பு பற்றி கூடுதல் விவரங்களை அறிய வேண்டும் என்றால் https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று அதிகாரபூர்வமான வேலைவாய்ப்பு அறிவிப்பை டவுன்லோடு செய்துகொள்ளலாம். அல்லது கீழ்க்காணும் இணைப்பைக் கிளிக் செய்து நேரடியாக பதிவிறக்கம் செய்யலாம்.

Download Tamil Nadu Postal Circle Gamin Dak Sevak (GDS) Recruitment Notifiction 2023

நினைவில் கொள்ளவேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 16, 2023

விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய கடைசி நாள்: பிப்ரவரி 19, 2023

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
நவ்ஜோத் சித்துவின் மனைவி காங்கிரஸில் இருந்து அதிரடி நீக்கம்..! சர்ச்சை நாயகனின் தொடர் அட்ராசிட்டி!