Video: ஃபார்முலா மறுபடியும் சொல்லு.. மாணவனின் கழுத்தை நெரித்து தாக்கிய ஆசிரியர் - பதறவைக்கும் வீடியோ வெளியானது

Published : Jan 30, 2023, 05:49 PM IST
Video: ஃபார்முலா மறுபடியும் சொல்லு.. மாணவனின் கழுத்தை நெரித்து தாக்கிய ஆசிரியர் - பதறவைக்கும் வீடியோ வெளியானது

சுருக்கம்

ஃபார்முலா பற்றி மாணவனுக்குக் கற்றுக்கொடுக்கும் விதமாக ஆசிரியர் ஒருவர் மாணவன் ஒருவனை முழங்கையால் அடித்து,  கழுத்தை நெரிக்கும்  வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் ஆசிரியர் ஒருவர் மாணவன் ஒருவனை கண்மூடி தனமாக தாக்கும் வீடியோ பரவி வருகிறது.

அந்த வீடியோவில், மாணவர் ஒருவர் புரோட்டான் ஃபார்முலாவை திரும்பத் திரும்பச் சொல்லும் போது ஆசிரியர் அந்த மாணவனை முழங்கையால் கொடூரமாக அடிக்கிறார். இதில் மாணவன் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் போது, ஆசிரியர் மீண்டும் அதனை சொல்ல சொல்லி அடிக்கிறார். ஆசிரியர் மாணவனைத் தாக்கும்போது சில மாணவர்கள் அந்த மாணவனை பார்த்து சிறிது கொண்டிருக்கிறார்கள்.

இந்த வீடியோவை இதுவரை ட்விட்டரில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். இந்த வீடியோ வைரலானதையொட்டி பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் எங்கு நடைபெற்றது என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..DMK: நல்ல பீஸா அனுப்பு.. பெண் புரோக்கரிடம் ஆபாசமாக பேசிய திமுக நிர்வாகி - வைரல் ஆடியோ கிளப்பிய சர்ச்சை

இதையும் படிங்க..Adani: 1.45 லட்சம் கோடி போச்சு.! பணக்காரர் பட்டியலில் பின்னடைவு - அடுத்த விஜய் மல்லையாவாக மாறுகிறாரா அதானி?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!