Nitish Kumar:BJP:பாஜகவுடன் கூட்டணியா! செத்துருவேன்: நிதிஷ் குமார் கொந்தளிப்பு

By Pothy RajFirst Published Jan 30, 2023, 2:49 PM IST
Highlights

பாஜகவுடன் கூட்டணி சேர்வதற்குப் பதிலாக நான் செத்துவிடுவேன் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆவேசமாகத் தெரிவித்தார்

பாஜகவுடன் கூட்டணி சேர்வதற்குப் பதிலாக நான் செத்துவிடுவேன் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆவேசமாகத் தெரிவித்தார்

பீகார் மாநிலத்தில் பாஜகவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி நடத்திய ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ் குமார், 2 ஆண்டுகள் முடிவில் திடீரென கூட்டணியிலிருந்து விலகினார். முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்த நிதிஷ் குமார், காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணியுடன் சேர்ந்து புதிய ஆட்சி அமைத்தபின் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

பாரத் ஜோடோ யாத்ரா நிறைவு!கொட்டும் பனிமழையிலும் காஷ்மீரில் காங்கிரஸ் பேரணி

இந்நிலையில், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மீது மீண்டும் ஊழல் புகார் எழுந்துள்ளது இது தொடர்பாக பாஜக தலைவர்ககள் தேஜஸ்வியை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். கடந்த முறை தேஜஸ்வியாதவ் மீது ஊழல்புகார் வந்தபோதுதான் கூட்டணியிலிருந்து விலகி, பாஜகவுடன் நிதிஷ் குமார் சேர்ந்தார். இந்த முறை அவ்வாறு நடக்குமா எனத் தெரியவில்லை

பீகார் முதல்வர் நிதிஷ் குமாரிடம் இந்த சந்தேகத்தை நிருபர்கள் கேள்வியாக எழுப்பினர். அதற்கு நிதிஷ் குமார் பதில் அளிக்கையில் “ பாஜகவுடன் மீண்டும் கூட்டணியா. அந்தக் கேள்விக்கே இடமில்லை. அந்தக் கட்சியுடன் மீண்டும் கூட்டணி சேர்வதற்கு நான் செத்துவிடுவேன். 

கவனமாகக் கேளுங்கள், எங்கள் கூட்டணியைப் பிரிக்க பாஜகவினர் தீவிரமாக முயல்கிறார்கள். தேஜஸ்வி மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர், அவரின் தந்தை மீதும் வழக்கு இரு்கிறது. இப்போது மீண்டும் வழக்கு தொடர்கிறார்கள். பாஜகவினர் தொடர்ந்து இதுபோன்றுதான் செய்வார்கள்

அடுத்த ஆண்டு மக்களவைத் தொகையில் 36 இடங்களை வெல்வோம் என பாஜக கூறுகிறது. பாஜகவின் இந்துத்துவா சித்தாத்தில் எச்சரிக்கையாக இருந்த அனைத்து சமூகத்தினர், எனது ஆதாரவாளர்களையும், முஸ்லிம்களையும் பாஜக பயன்படுத்திக்கொண்டது” எனத் தெரிவித்தார்

சந்திரசேகர் முதல் ராகுல் காந்தி வரை! அரசியல் தலைவர்களின் வரலாற்று நடைபயணங்கள்: ஓர் பார்வை

முதல்வர் நிதிஷ் குமாரின் இந்தப் பேட்டியின்போது, துணை முதல்வரே தேஜஸ்வி யாதவும் உடன் இருந்தார்.

நிதிஷ் குமாருடன் இனிமேல் கூட்டணி இல்லை என பாஜக மாநிலத் தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதற்குப் பதிலடியாக நிதிஷ் குமார் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். 


 

click me!