ஹனிமூனில் குதிரை ஓட்டிய புது மாப்பிள்ளை பரிதாப பலி

By SG BalanFirst Published Jan 30, 2023, 1:54 PM IST
Highlights

ஹனிமூனுக்குச் சென்றபோது குதிரைப் பயணம் செய்த மாப்பிள்ளை கீழே விழுந்து உயிரிழந்தார்.

ஹனிமூனுக்குச் சென்றபோது குதிரைப் பயணம் செய்த மாப்பிள்ளை கீழே விழுந்து உயிரிழந்தார்.

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை பகுதியைச் சேர்ந்தவர் முகமது குவாசிப் இம்தியாஸ் ஷேக். 23 வயதான இவருக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது. இவர் ஜனவரி 25ஆம் தேதி தன் மனைவியுடன் ராய்கட் மலைப்பகுதிக்கு ஹனிமூன் சென்றுள்ளார். இரண்டு நண்பர்களும் உடன் சென்றுள்ளனர்.

ராய்கட்டில் குதிரை சவாரிக்கு பிரசித்த பெற்றது என்பதால் முகமது குதிரை சவாரி செய்ய விரும்பியுள்ளார். இதனால் நால்வரும் குதிரை சவாரி செய்துள்ளனர். திடீரென முகமது சவாரி செய்த குதிரை கட்டுக்கடங்காமல் வேகமாக ஓடத் தொடங்கிவிட்டது.

Mahatma Gandhi: மகாத்மா காந்தி 75வது நினைவு நாளில் தலைவர்கள் அஞ்சலி

இதில், முகமது பாயும் குதிரையிலிருந்து கீழே தவறி விழுந்தார். துரதிர்ஷ்டவசமாக அவர் விழுந்த இடத்தில் பாறைகள் இருந்ததால் தலையில் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் மதேரானில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின் உயர் சிகிச்சைக்காக உல்ஹஸ் நகரில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.

இதுபற்றி உல்ஹஸ்நகர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறது. இதேபோல குதிரை சவாரி விபத்துகள் அடிக்கடி நடப்பதாக காவல்துறையினர் கூறுகின்றனர். குதிரை சவாரி செய்யும் பயணிகளுக்கு ஹெல்மெட் வழங்க வேண்டும் என்ற விதிமுறையை பலர் பின்பற்றுவதில்லை என்றும் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாவும் தெரிவிக்கின்றனர்.

click me!