Rahul Gandhi Yatra: சந்திரசேகர் முதல் ராகுல் காந்தி வரை! அரசியல் தலைவர்களின் வரலாற்று நடைபயணங்கள்: ஓர் பார்வை

By Pothy RajFirst Published Jan 30, 2023, 1:28 PM IST
Highlights

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 4 மாதங்கள் மேற்கொண்ட பாரத் ஜோடோ யாத்ரா இன்று காஷ்மீரின் ஸ்ரீநகரில் நிறைவடைந்துள்ளது. இந்திய வரலாற்றில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த பல தலைவர்களின் வரலாற்று நடைபயணத்தில் ராகுல் காந்தியின் நடைபயணமும் இடம் பெற்றுள்ளது.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 4 மாதங்கள் மேற்கொண்ட பாரத் ஜோடோ யாத்ரா இன்று காஷ்மீரின் ஸ்ரீநகரில் நிறைவடைந்துள்ளது. இந்திய வரலாற்றில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த பல தலைவர்களின் வரலாற்று நடைபயணத்தில் ராகுல் காந்தியின் நடைபயணமும் இடம் பெற்றுள்ளது.

அரசியல் தலைவர்கள் மேற்கொண்ட நடைபயணத்துக்குப்பின் மத்தியிலும், மாநிலங்களிலும் பெரிய அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் நடந்துள்ளது கடந்த வரலாற்றின் மூலம் அறியப்படுகிறது. அந்த வகையில் ராகுல் காந்தி நடைபயணம் அமையுமா என்பது அரசியல் நோக்கர்கள் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 

ராகுல் காந்தி நடத்திய பாரத் ஜோடோ யாத்ரா ஸ்ரீநகரில்இன்று நிறைவு

ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி, பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டார். இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியணா, டெல்லி, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களைக் கடந்து 4ஆயிரம் கி.மீ நடந்துள்ளார்.

இந்த யாத்திரையில் ராகுல் காந்தி 12 பொதுக்கூட்டங்கள், 100 சாலை ஓரக் கூட்டங்கள், 13 பத்திரிகையாளர் சந்திப்புகள், 275 நடைபயண பேச்சுகள், 115 ஆலோசனைக் கூட்டங்களை  நடத்தியுள்ளார்.
இந்திய வரலாற்றில் அரசியல் தலைவர்கள் மேற்கொண்ட முக்கிய நடைபயணங்கள்

தேசியக் கொடி மிஞ்சிய ராகுல் கட்அவுட்! காங்கிரசை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

1983, சந்திரசேகரின் பாரத் யாத்ரா:

கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் ஜனதா கட்சித் தலைவர் சந்திரசேகர் கன்னியாகுமரியில் இருந்து டெல்லிவரை நடைபயணம் கொண்டார். 1983,ஜனவரி 6ம்தேதி நடைபயணத்தை தொடங்கிய சந்திரசேகர் ஏறக்குறைய 6 மாதங்கள் நடந்து டெல்லியை அடைந்தார். இந்த யாத்திரை அரசியலில் பெரிய மாற்றத்தை சந்திரசேகருக்கு ஏற்படுத்தி வெற்றிகரமாக அமைந்தது.

1985, காங்கிரஸ் சந்தேஷ் யாத்ரா:

காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தி மும்பையில் இந்த யாத்திரையைத் தொடங்கி நாடுமுழுவதும் சென்றார். மாநில காங்கிரஸ் தலைவர்களும் பல்வேறு மாநிலங்களில் யாத்திரை மேற்கொண்டு, டெல்லி ராம்லீலா மைதானத்தில் 3 மாதங்களுக்குப்பின் முடிந்தது. 

1990, எல்கே அத்வானி ரத யாத்திரை:

பாஜக மூத்த தலைவர் எல்கே அத்வானி ரத யாத்திரை 1990ம் ஆண்டு நடத்தினார். 1990 செப்டம்பரில் யாத்ராவைத் தொடங்கிய அத்வானி, 10ஆயிரம் கி.மீ பயணித்து அக்டோபர் 30ல் அயோத்தியை அடைந்தார். பீகாரில் யாத்திரை வந்தபோது அப்போது முதல்வராக இருந்த லாலுபிரசாத் யாதவ் அரசால் அத்வானி கைது செய்யப்பட்டார். இந்த யாத்திரை பாஜகவுக்குமிகப்பெரிய அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

1990, காங்கிரஸ் சத்பவனா யாத்திரை:
1990, அக்டோபர் 19ம் தேதி ராஜீவ் காந்தி யாத்திரையை தொடங்கினார், நவம்பர் 1ம் தேதி சார்மினார் பகுதியில் ராஜீவ் காந்தி தேசியக் கொடிஏற்றினார். அதேபோல நவம்பர் 1ம்தேதி ராகுல் காந்தியும் பாரத் ஜோடோ யாத்திரையில் சார்மினார் பகுதியில் கொடி ஏற்றினார்

1991, ஏக்தா யாத்ரா:

பாஜக முன்னாள் தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஏக்தா தேச ஒற்றுமை மற்றும் ப பிரிவினைவாத இயக்கங்களுக்கு எதிராக யாத்திரை தொடங்கினார். டிசம்பரில் கன்னியாகுமரியில் தொடங்கி, 14 மாநிலங்களில் யாத்திரை நடந்தது. அத்வானியின் ரத யாத்திரையைத் தொடர்ந்து இந்த யாத்திரை நடந்தது. 1992, ஜனவரி 26ம் தேதி ஸ்ரீநகரில் லால்சவுக் பகுதியில் ஜோஷி தேசியக் கொடி ஏற்றினார். 2011ல் இதேபோன்ற யாத்திரையை கொல்கத்தா முதல்காஷ்மீர் வரை பாஜக நடத்தியது.

2003, ஏப்ரல்,ஒய்ஆர் ரெட்டி யாத்ரா:

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஒய்எஸ் ராஜசேகர் ரெட்டி ஆந்திராவில் 1400 கி.மீ நடைபயணம் செய்து தெலுங்குதேசம் கட்சிைய அடுத்துவந்த தேர்தலில் தோற்கடித்து காங்கிரஸை தேர்தலில் வெல்ல வைத்தார். 

2004, பாஜகவின் பாரத் உதய் யாத்ரா:
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் தெரிவிக்க அத்வானி நடத்திய யாத்ராவாகும். இது தேர்தலில் பெரிதாகபாஜகவுக்கு வாக்குகளைப் பெற்றுத் தரவில்லை, அடுத்து தேர்தலில் தோல்வி அடைந்தது

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா திடீர் நிறுத்தம்: காரணம் என்ன?

2017, ஜெகன் யாத்திரை:

2017ம் ஆண்டு ஒய்எஸ்ஆர் ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி பிரஜா சங்கல்ப யாத்திரை மேற்கொண்டார். 3500 கி.மீ நடைபயணம் செய்த ஜெகனுக்கு 2019ம்ஆண்டு தேர்தலில் மக்கள் வெற்றியை அள்ளிக்கொடுத்தனர். 

2017,நர்மதா பரிகிரமா யாத்திரை:

காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் நர்மதா பரிகிரமா யாத்திரையை குஜராத்தின் நரசிங்கபூர் மாவட்டத்தில் தொடங்கினார். 3ஆயிரம் கி.மீ நடைபயணம் செய்து திக்விஜய் சிங்கால், 2019 மத்தியப்பிரதேசத் தேர்தலில் மாபெரும் வெற்றியை காங்கரிஸுக்கு பெற்றுத் தர முடிந்தது

2021, பாஜக ஜன் ஆசிர்வாத் யாத்ரா:
2021ம் ஆண்டு பாஜகவின் 39 மத்திய அமைச்சர்கள் 22 மாநிலங்களில் ஜன் ஆசிர்வாத் யாத்திரை செய்தனர். 212 மக்களவைத் தொகுதிகளில் 39 அமைச்சர்கள் 19,567 கி.மீ நடைபயணம் செய்து மக்களிடம் பாஜக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறினர். 

2022, செப்டம்பர் பாரத் ஜோடோ யாத்திரை

2022, செப்டம்பர் 7ம் தேதி காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பாரத் ஜோயோ யாத்திரையை கன்னியாகுமரியில் தொடங்கி, 2023, காஷ்மீர் ஸ்ரீநகரில் முடித்தார். இந்தப் பயணம் நாடுமுழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்களுக்கும், கட்சிக்கும் பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது.

 

click me!