75 நாட்களில் 6,744 பேருக்கு அம்மை நோய் பாதிப்பு.. கேரள சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்..

By Ramya sFirst Published Mar 18, 2024, 12:22 PM IST
Highlights

கேரளாவில் 75 நாட்களில் 6,744 பேருக்கு அம்மை நோய் பாதிப்பு பதிவாகி உள்ளதாகவும் 9 பேர் பலியாகி உள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கேரளாவில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அம்மாநிலத்தில் அம்மை நோய் பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்த வண்ணம் உள்ளன. அதன்படி கடந்த 75 நாட்களில் 6,744 பேருக்கு அம்மை நோய் பாதிப்பு பதிவாகி உள்ளதாகவும்,  குழந்தைகள் உட்பட 9 பேர் பலியாகி உள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கடந்த ஆண்டு, கேரளாவில் மொத்தம் 26,363 பேருக்கு அம்மை நோய் பாதிப்பு உறுதியானது, 4 பேர் உயிரிழந்தனர். கேரளாவின் இந்திய மருத்துவ சங்கத்தின் ஆராய்ச்சி பிரிவின் தலைவர் டாக்டர் ராஜீவ் ஜெயதேவன் இதுகுறித்து பேசிய போது “  வெப்பநிலை அதிகரிப்பதால், நோய் பாதிப்பு வாய்ப்புகள் அதிகம்.  பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொள்வதன் மூலம் மற்ற நபருக்கு இந்த நோய் பரவுகிறது. இந்த வைரஸ் காற்றின் மூலமாகவும் பரவுகிறது” என்று கூறினார்.

Parenting Tips : பெற்றோர்களே... உங்கள் குழந்தை ஜங்க் ஃபுட் சாப்பிடுவதை நிறுத்த சூப்பரான ஐடியாக்கள் இதோ!!

தொடர்ந்து பேசிய அவர் “இந்த நோய் சில சமயங்களில் சிசுக்கள், நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆபத்தானதாக இருக்கலாம். சில சந்தர்ப்பங்களில் மரணத்திற்கு கூட வழிவகுக்கும். எனவே, தடுப்பு நடவடிக்கைகள்  முக்கியமானது.” என்றும் கூறினார்.

அனைத்து தோல் புண்களும் குணமாகும் வரை நோயாளிகள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலம் நோய் பரவுவதைத் தடுக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். 

கேரளாவின் ஐஎம்ஏவின் முன்னாள் தலைவர் டாக்டர் சுல்பி நூஹு இதுகுறித்து பேசிய போது, கோடைகாலத்திற்கு முன்பு இந்த நோய் பரவல் பொதுவாக ஏற்படும் என்றார். எல்லா பருவங்களிலும் நோய் பரவினாலும், வெப்பநிலை அதிகரிக்கும் போது நோய் பாதிப்பு அதிகரிக்கிறது. எனவே, மக்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பதும், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியம், “தடுப்பூசி போட்டால் ஒருவருக்கு அம்மை நோய் வராமல் தடுக்கலாம். மேலும், பயனுள்ள சிகிச்சை விருப்பங்களும் உள்ளன” என்றும் கூறினார்.

அம்மை நோய் அறிகுறிகள்

நோயாளி உடல் வலி, சோர்வு மற்றும் பசியின்மை ஆகியவற்றை அனுபவிக்கலாம். முதலில் தலை மற்றும் வாயில் சிறிய கொப்புளங்கள் தோன்றும். பின்னர் அவை மார்பு மற்றும் பிற உடல் பாகங்களில் தோன்றும்.

நீங்கள் ஒரு மாதம் டீ குடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டால், என்ன நடக்கும் தெரியுமா?

சிகிச்சை

அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சுகாதார நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து சிகிச்சை பெற வேண்டும்

மற்றவர்களுடன் தொடர்பைத் தவிர்க்கவும், சுத்தமான மற்றும் காற்றோட்டமான அறையில் தங்கவும்

இருமல் மற்றும் தும்மலின் போது வாய் மற்றும் மூக்கை மூடிக்கொள்ளவும்

சத்தான உணவை உட்கொள்ளுங்கள்

சுய சிகிச்சையைத் தவிர்க்கவும், மருத்துவர்களின் அறிவுறுத்தல்களின்படி மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்

click me!