ஹைதராபாத் உயிரியல் பூங்காவில் இருந்த பிரபல சாணக்யா ஆமை தனது 125வது வயதில் இறந்தது
ஹைதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் கலபகோஸ் வகை ராட்சத ஆமை தனது 125 வயதில் இறந்தது. சாணக்யா என்று அழைக்கப்படும் இந்த ஆமை, அந்த பூங்காவில் வசிக்கும் மிகவும் வயதான ஆமையாக இருந்தது. இந்த நிலையில் இந்த ஆமை வயது தொடர்பான சிக்கல்களால் இறந்தது. கடந்த சில நாட்களாகவே சாணக்யா ஆமை சாப்பிடவில்லை என்றும் கூறப்படுகிறது. இ
தை தொடர்ந்து அந்த கால்நடை மருத்துவக் குழுத் தலைவர் டாக்டர் எம்.ஏ.ஹக்கீமின் கண்காணிப்பில் இருந்தது. அந்த ஆமைக்கு உருளைக்கிழங்கு மற்றும் கீரை வழங்கப்பட்ட போதிலும், 10 நாட்கள் சாப்பிடவில்லை என்று உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நள்ளிரவில் தடம் புரண்ட ரயில்.. அலறிய ரயில் பயணிகள்.. ராஜஸ்தானின் அஜ்மீரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
உயிரியல் பூங்கா ஊழியர்கள் இன்று காலை சாணக்யா ஆமையின் கூண்டை சுத்தம் செய்த போது அது தூக்கத்தில் இறந்துவிட்டதைக் கண்டனர். 1963 இல் நாம்பள்ளியில் உள்ள பொதுத் தோட்டத்திலிருந்து (பாக்-இ-ஆம்) சாணக்யா ஹைதராபாத் உயிரியல் பூங்காவுக்கு மாற்றப்பட்டது. அதன்பின்னர் ஹைதராபாத் உயிரியல் பூங்கா அவரது இல்லமாக இருந்தது.
இந்த நிலையில் அந்த ஆமை இறந்தது பூங்கா ஊழியர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது. பல உறுப்புகள் செயலிழந்ததால் ஆமை இறந்ததாக முதல்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. மேலும் ஆய்வுக்காக, மாதிரிகள் கால்நடை உயிரியல் மற்றும் ரெச் நிறுவனம் மற்றும் ராஜேந்திரநகரில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டுள்ளன.
கலபகோஸ் ராட்சத ஆமை ஆமையின் மிகப்பெரிய இனமாகும். சார்லஸ் டார்வினின் ‘உயிரினங்களின் பரிணாமம்’ கோட்பாட்டிற்கு இந்த வகை ஆமையை வைத்தே அவர் ஆய்வு மேற்கொண்டார். மனித பர்ரிணாமம் பற்றிய முக்கியமான முடிவுகளை எடுக்க பல ஆண்டுகளாக சார்லஸ் டார்வின் ஆய்வு செய்தார்.
மாஸ்டர்! சூடா ஒரு தோசை.. ஆர்டர் செய்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. 8 கரப்பான் பூச்சியா..
நேரு உயிரியல் பூங்காவில் கிட்டத்தட்ட 193 வகையான பறவைகள், விலங்குகள் மற்றும் ஊர்வன உள்ளன. காண்டாமிருகம், யானை, நீலகிரி லாங்கூர், சிங்கவால் மக்காக், சாரஸ் கொக்கு, சாம்பல் பெலிகன் மற்றும் வர்ணம் பூசப்பட்ட நாரை போன்ற அரிய, அச்சுறுத்தும் மற்றும் அழிந்து வரும் உயிரினங்களுக்கு பெயர் பெற்றது. இந்திய மலைப்பாம்பு, இந்திய நட்சத்திர ஆமை, இந்திய மென்மையான ஓடு ஆமை மற்றும் இந்திய பச்சோந்தி ஆகியவையும் இங்கு வளர்க்கப்படுகின்றன.
மேலும் நீர்யானை, ஆப்பிரிக்க சிங்கம், ஜாகுவார், தீக்கோழி, மற்றும் பச்சை உடும்பு ஆகியவை இந்த உயிரியல் பூங்காவில் வளர்க்கப்படுகின்றன. இந்த உயிரியல் பூங்காவின் திறப்பு விழாவின் போது சாணக்யா ஆமையும் மற்றொரு 95 வயது ஆமையும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.