இந்தியாவின் முதல் தபால் நிலையத்துக்கு வயது 250!

By Manikanda Prabu  |  First Published Mar 18, 2024, 12:00 PM IST

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் இந்தியாவின் முதல் பொது தபால் நிலையம் 250 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது


மேற்குவங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் இந்தியாவின் முதல் பொது தபால் நிலையம் 250 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 1774ஆம் ஆண்டு மேற்குவங்கத்தின் அப்போதைய கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்ஸ், இந்தியாவின் முதல் பொது அஞ்சல் அலுவலகத்தை கொல்கத்தாவில் நிறுவினார்.

இந்தியாவின் முதல் பொது அஞ்சல் அலுவலகம் என்ற பெருமையைப் பெற்றுள்ள கொல்கத்தா பொது தபால் நிலையம், அதன் 250 ஆண்டுகால வரலாற்றில், தபால் சேவைகளின் பரிணாம வளர்ச்சிக்கு ஒரு சான்றாக விளங்குகிறது. 

Tap to resize

Latest Videos

இதுகுறித்து மேற்குவங்க வட்டத்தில் தலைமை தபால் அதிகாரி ஜெனரல் நீரஜ் குமார் கூறுகையில், இந்தியாவின் அஞ்சல்துறை எப்போது செயல்பாட்டில் உள்ளது என்பதை கொல்கத்தா பொது தபால் நிலையம் சுட்டிக்காட்டுகிறது. தபால் சேவைகளின் மூலக்கல்லாக செயல்படும் இந்த தபால் நிலையம், இந்தியாவின் தபால் சேவைகளின் முக்கியத்துவத்தை நாடு முழுவதும் எடுத்துரைக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.” என்றார்.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் இந்தியாவின் முதல் பொது தபால் நிலையம் 250 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள சாதனையை கொண்டாடும் வகையில், மார்ச் மாதம் முழுவதும் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் 250 ஆண்டுகால பயணத்தை பறைசாற்றும் வகையில் தபால் நிலைய வளாகத்தில் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

அதில், அஞ்சல், தபால்தலை உள்ளிட்டவைகள் இடம்பெற்றுள்ளன. தபால்கள் எப்படி ரயில்கல், கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்தும், 1911ஆம் ஆண்டு முதன்முறையாக தபால்கள் விமானத்தில் எடுத்துச் செல்லப்பட்டது குறித்தும் முப்பரிமாண வடிவத்தில் விளக்கும் காட்சிகளும்  கண்காட்சி அரங்கில் இடம்பெற்றுள்ளன.

அதிமுக - தேமுதிக கூட்டணி உறுதியானது: தேமுதிகவுக்கு 4 தொகுதிகள்?

இந்த கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக கொல்கத்தாவில் உள்ள ஹூக்ளி நதி, லால்டிகி நீர்நிலை, கொல்கத்தா பொது தபால் கட்டிடம், டல்ஹவுசி சதுக்கம் பகுதியில் உள்ள பல பிரிட்டிஷ் கால வெள்ளை நிற கட்டிடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்த கண்கவர் தோற்றத்தை பலரும் கண்டு களித்து வருகின்றனர்.

கொல்கத்தாவில் உள்ள இந்தியாவின் முதல் பொது தபால் நிலையம் 1774 முதல் 1868 வரை பல்வேறு இடங்களுக்கு பல முறை இடமாற்றம் செய்யப்பட்டது. தற்போதைய கட்டிடம் அக்டோபர் 2, 1868 அன்று பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. இரு நூற்றாண்டுகளை கடந்து இன்னும் செயல்பட்டு வரும் அந்த தபால் நிலையம், புதுமைகளுக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொண்டு செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!