நள்ளிரவில் திடீரென பெய்த கனமழை... மண்ணில் புதைந்த வீடு.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி...

By Ajmal KhanFirst Published Aug 29, 2022, 12:34 PM IST
Highlights

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் கனமழை காரணமாக நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், 2 பேரின் உடல்களை மீட்பு படையினர் மீட்டுள்ளனர்.

கேரளாவில் திடீர் கன மழை

கேரளாவில் கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக மீண்டும் கனமழை வெளுத்துக்கட்டி வருகிறது.குறிப்பாக கோட்டயம்,இடுக்கி, கண்ணூர்,தொடுபுழா, பத்தினம்திட்டா ஆகிய மாவட்டங்களில் அதிக கன மழை பெய்து வருகிறது. இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே காஞ்சார் என்னும் பகுதியில் சங்கமம் மற்றும் மாலிக்கால் காலணியில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில், வீடிஇடிந்து வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சோமன்,சோமனின் மனைவி ஜெயா, மகள் சீமா, சீமாவின் குழந்தை மற்றும் சோமனின் தாயார் தங்கம்மாள் ஆகியோர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

ஜெயலலிதா மரணம் விசாரணை அறிக்கை எப்போது வெளியிடுவது..? தமிழக அமைச்சரவை கூட்டத்தில் இன்று முடிவு..?

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

50க்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டபோது, தங்கம்மாள் மட்டும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த நிலையில் இருந்தார். மீதமுள்ள நான்கு பேரை தேடும் முயற்சியில் ஈடுபட்ட போது சோமனின் மகள் சீமாவின் உடல் மட்டும் மீட்கப்பட்டது. மீதமுள்ள மூன்று பேரை தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர்.

தொடர் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி,வீடு இடிந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் தொடர் மழை காரணமாக கோட்டயம், பத்தனம் திட்டா, இடுக்கி போன்ற பல்வேறு மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை !!


 

click me!